Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜனவரி, 2020

கூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).!


சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்
ப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் நமக்கு பாதுகாப்புடன் வருகிறதா என்றால் சந்தேகம் தான். குறிப்பாக நமக்கு தெரியாமல் சில செயிலகள்(ஆப்) நமது தகவல்களை திருடும். எனவே தான் கூகுள் நிறுவனம் சந்தேகமான ஆப் வசதிகளை கண்டுபிடித்து நீக்கி வருகிறது.
சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்
கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தனது பிளே ஸ்டோரில்இருந்து சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்களை நீக்கிவிட்டது. அவற்றில் சில ஆட்வேர், சில மால்வேர் மற்றும் பயனர்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்கள் மற்றும் சில இடம் சார்ந்த தகவல்கள் ஆகியவைகள் அடங்கும்.
ரகசியமாக திருடும் ஆப்
இதிலும் மிகவும் ஆபத்தான வகைகளின் ஒன்றுதான் பயனர்களின் ஸ்மாரட்போனில் உள்ள புகைப்படங்களை ரகசியமாக திருடும் ஆப்கள். இந்த வகையின் கீழ் 29செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
அன்இன்ஸ்டால்
கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து ஆபத்தான செயலிகளை நீக்கிவிட்டாலும் கூட, அதை டவுன்லோட் செய்த பயனர்கள் இன்னமும் அவைகளை தங்களின் ஸ்மார்ட்போனில் கொண்டுள்ளன. எனவே இந்த 29 ஆப்களில்
ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகீறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியல்-1
ப்ரோ கேமரா பியூட்டி (Pro Camera Beauty)
போட்டோ எடிட்டர் (Photo Editor)
போட்டோ ஆர்ட் எபெக்ட் (Photo Art Effect)
பிரிஸ்மா போட்டோ எபெக்ட் (Prizma Photo Effect)
செல்பீ கேமரா ப்ரோ (Selfie Camera Pro)
ஹாரிஸான் பியூட்டி கேமரா (Horizon Beauty Camera)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோஸ் (Cartoon Art Photos)
கார்ட்டூன் எபெக்ட் (Cartoon Effect)
கார்ட்டூன் போட்டோ பில்டர் (Cartoon Photo Filter)
பட்டியல்-2
ஆஸம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ பில்டர் (Cartoon Art Photo Filter)
ஆர்ட் பில்டர் போட்டோ (Art Filter Photo)
ஆர்ட் பில்டர் (Art Filter)
ஆர்ட் ஃபிளிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)
பட்டியல்-3
ஆர்ட் எபெக்ட்ஸ் ஃபார் போட்டோ (Art Effects for Photo)
ஆர்ட் போட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)
ஆர்ட் பில்டர் போட்டோ எபெக்ட்ஸ் (Art Filter Photo Effcts)
பட்டியல்-4
பிக்ஸ்சர் (Pixture)
சூப்பர் கேமரா (Super Camera)
வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)
ஆர்ட் எடிட்டர் (Art Editor)
மேஜிக் ஆர்ட் பில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)
ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)
பட்டியல்-5
ஆர்டிஸ்டிக் எபெக்ட் பில்டர் (Artistic effect Filter)
ஆர்ட் எபெக்ட் (Art Effect)
பியூட்டி கேமரா (Beauty Camera)
எமோஜி கேமரா (Emoji Camera)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக