பேய் என்று
சொன்னாலே நம்மில் நிறைய பேருக்கு கை, கால்கள் கிடுகிடுவென்று நடுங்கும். அவவ்ளவு பயம்.
அப்படி எல்லோரையும் கிடுகிடுக்க வைக்கும் பேயாக மனிதன் இறந்த பின் மாறுவது எப்படி,
யாரெல்லாம் பேயாக மாறுகிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.
பேய்
பேய்
என்ற சொல்லுக்குப் பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பேய் பற்றிய நம்பிக்கை
இல்லாதவர்கள் கூட, தங்களுக்கே உள்ளுக்குள் ஒருவித பயத்தோடு தான் நடந்து
கொள்கிறார்கள். பேய்கள் பற்றி பல்வேறு வகையான கதைகள் உலவிக் கொண்டிருப்பதைக்
கேட்டிருப்போம். எவ்வளவு கடினமான மனதுடையவராக இருந்தாலும் கூட, பேய் என்றால்
தனியாக இருக்கும் சமயங்களில் உள்ளுக்குள் ஒருவித பயமும் தயக்கமும் உண்டாகத் தான்
செய்கிறது. தனியாக இருட்டில் நடந்து செல்கின்ற பொழுது, ஏதேனும் நிழல் அசைவது போல
தெரிந்தால் கூட, தன் பின்னால் ஒருவேளை பேய் வருகிறதா என்று எண்ணத் தோன்றும்.
பேய் என்பது என்ன?
கிராமப்புற
வாய்மொழிக் கதைகளைப் பொருத்தவரையில், பேய் என்பது இறந்து போன மனிதர்கள் அல்லது
விலங்குகளினுடைய மறுவடிவம். அவை உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
கண்களுக்குத் தெரியாமல், மீண்டும் இங்கே வந்து நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து
கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பேயின் உருவம்
பேயின்
உருவம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதற்கு இருவேறு வடிவங்கள்
கொடுக்கப்படுகின்றன. ஒன்று நாம் பார்த்தால் பயந்து போகும், கொஞ்சம் அகோர வடிவ
முகங்களும், சில கதைகள் நம்மைப் போன்ற சாதாரண மனித உருவங்களாகவுமே
சித்தரிக்கப்படுகின்றன. இதில் சிலர் பேயை ஆவியாக வவைழைத்துப் புசுவதாகவும் கதைகள்
உண்டு.
நமக்குப்
பேய் என்றாலே மர்மங்களும் பயங்களும் நிறைந்த ஒரு விஷயமாகத் தான் இருக்கிறது. வயசு
வித்தியாசமே இல்லாமல் இந்த உலகில் உள்ள எல்லோரையும் நமக்குத் தெரியாத ஒரு விஷயம்
பயமுறுத்துகிறது என்றால், அது பேயாகத் தான் இருக்க முடியும்.
இறந்த பின்
மனிதன்
இறந்த பின் அவனுடைய புற உடல் மற்றும் எரிக்கவோ புதைக்கவோ செய்யப்படுகிறது. ஆனால்
புற உடலைத் தவிர, அவர்களுடைய ஆவி. அறிவு, ஜீவன் அனைத்துமே இந்த உலகத்துக்குள்ளேயே
சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. இப்படி இறந்த பின் பேய்களாக உலாவிக் கொண்டு,
இந்த உலகில் சுற்றித் திரிந்து ஏன் நம்மை பயமுறுத்துகின்றன என்பது குறித்து இங்கே
பார்க்கலாம்.
நிறைவேறாத ஆசை
இறந்து
போனவர்களுக்கு ஏதேனும் நிறைவேறாத ஆசை இருந்தால், அவர்களுடைய ஆன்மா அடுத்த
நிலைக்குச் செல்லாமல் இந்த பூமியையே சுற்றிச் சுற்றி வரும். அவர்களுக்குப் பிடித்த
விஷயமோ பொருளோ அவர்களுக்குத் தெரிந்த யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதிக ஈகோ கொண்டவர்கள்
வாழும்
காலத்தில் சிலர் மிக மிக மோசமான ஈகோ குணம் கொண்டவாகளாக இருப்பார்கள். அப்படி
இருப்பவர்களுடைய ஆவி இறந்த பின்னும் கண்டிப்பாக இங்கே தான் உலவிக் கொண்டிருக்கும்.
ஏனென்றால் அப்படிப்பட்ட குணம் கொண்டவர்களுக்கு நிச்சயமாக தீர்க்காத ஏதேனும் கணக்கு
வழக்குகள் தங்களின் எதிரிகளிடம் மிச்சம் இருக்கும். அதைத் தீர்ப்பதற்காகவே
சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஒருவருடைய ஆவி எப்போது மற்றொருவரின் உடலுக்குள்
புகுந்து கொள்ளும் தெரியும். அவருடைய ஆவி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்
செல்லப்படுகின்ற பொழுது தான். அதனால் தான் அதுவரையிலும் அவர்கள் பேயாக சுற்றித்
திரிகிறார்கள்.
யாரை தேர்ந்தெடுப்பார்கள்?
இந்த
உலகத்தில் சுற்றித் திரிகின்ற பொழுது, எப்பொழுது என்ன செய்கிறோம், எங்கு
செல்கிறோம் என்பது புரிளாத நிலையில் இருக்கின்ற பொழுது, இங்கே பூமியில்
உலாவுவதற்கு அதற்கென ஒரு பிடிப்புத் தேவைப்படும். அந்த சமயங்களில் தான் யாரையாவது
தேர்வு செய்து கொண்டு அவர்களுக்குள் புகுந்து கொள்ளும். சில பேய்கள் அப்படி
இக்கட்டு வந்தாலும் யாரையும் தேர்வு செய்து உள்ளே புதுந்து கொள்வது இல்லை.
குறைவான ஆன்மீக எண்ணம்
ஆன்மீக
எண்ணங்கள் இல்லாதவர்களும் குறைவாக ஆன்மீக எண்ணம் கொண்டவர்களையும் பேய்கள் குறி
வைக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை விடவும் எதிர்மறை ஆற்றல்கள்
அதிகமாக இருக்கும். அதனாலேயே அவர்களுடைய மனம், எண்ணம், உடல் ஆகியவற்றை எளிதாகக்
கைக்கொண்டு விட முடியும் என்று பேய் நினைத்து நெருங்க ஆரம்பிக்கிறது.
எதிர்மறை ஆற்றல்
சிலரை
நீங்கள் ச்நதித்திருப்பீர்கள். நேர்க் கோட்டில் யோசிக்கவே தெரியாது. எப்போது
குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் எதிர்மறையாக மட்டுமே யோசிப்பார்கள். யார்
எதிர்மறையாக யோசிக்கிறார்களோ, யாருடைய மனசு முழுக்க விஷமாக இருக்கிறதோ, அதேபோல்
எப்போதும் கோபம், ஆத்திரம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை எண்ணங்களாலே
நிறைந்திருக்கிறார்களோ அவர்களை பேய்களுக்குப் பிடிக்கும். இதில் இன்னொரு
முக்கியமான விஷயம் என்னவென்றால், உயிருடன் இருக்கும்போது அப்படி எதிர்மறை
ஆற்றல்களோடு வாழ்ந்தவர்களாக இருநு்தால், இறந்து பேயான பின் சாந்தமான பேயாக
அப்படியே மாறிவிடுமாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக