
பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து
வரும் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சறுக்கி வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
அதிலும்
இந்தியாவைப் பொறுத்தவரையில் வோடபோனுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில்,
தற்போது வோடபோன் எகிப்து நிறுவனம் குறிப்பிட்ட பங்கினை சவுதி டெலிகாம் கோ
நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
வோடபோன் நிறுவனம் தனது வணிகத்தை
விரிவுபடுத்தும் நோக்கத்தில் 2.39 பில்லியன் டாலருக்கு பங்கினை விற்பனை செய்ய
ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச
அளவில் தனது சேவை செய்து வரும் மொபைல் ஆப்ரேட்டரான வோடபோன் எகிப்தில் வோடபோனின்
55% பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது வட
ஆப்பிரிக்கா நிறுவனத்தில் 4.35 பில்லியன் டாலர் நிறுவன மதிப்பிலான பங்குகளை
அளிக்கிறது என்றும் சவுதி டெலிகாமின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. மேலும் தற்போது இது குறித்தான பேச்சு வார்த்தைகள் மும்முரமாக
நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த
நிலையில் வோடபோன் எகிப்து பங்குகள் 0.8% வீழ்ச்சி கண்டு, 11:35 ரியாத்தாக
வர்த்தகமாகி வருவதாகவும், இதே லண்டனை அடிப்படையாக கொண்ட வோடபோன் குழுமம் 0.2%
ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்
இது குறித்து வோடபோன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தின்
மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கடனைக் குறைக்க பயன்படுத்தும் என்றும்
கூறியுள்ளது.
இதற்கிடையில்
இந்திய வர்த்தகத்தில் பெருத்த அடி வாங்கியிருக்கும் வோடபோன் ஐடியா, ஏற்கனவே கடந்த
சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு
உதவாவிட்டால், நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
அதிலும்
வோடபோன் ஐடியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே நஷ்டம் கண்டு வருவதாகவும், இது
தற்போது சுமார் 50,922 கோடி நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறியிருந்தது. இது பெரு
நிறுவன வரலாற்றிலேயே இப்படி ஒரு நஷ்டத்தினை கண்டிருக்க முடியாது. அத்தகையதொரு
பெரும் இழப்பு என்றும் கூறப்படுகிறது.
இது
தவிர மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 22,830 கோடி
ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில்
இத்துறையில் நீடித்து வரும் பிரச்சனைகளை களைந்து, அரசு நிவாரணம் வழங்குவது என்பது
தற்போதைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக