Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

இந்த 8 வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம்.! தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தல்.!

இந்த 8 வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம்.! தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தல்.!



கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக எந்தப் பதிவும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சிலருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Possible methods of protection from the #coronavirus: pic.twitter.com/oZcOjeRxxX
— NDMA India (@ndmaindia) January 28, 2020
இந்நிலையில், மக்கள், தங்களை கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை, இந்தியத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ளது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றுமாறு மத்திய அரசும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
1.      பொதுமக்கள் அனைவரும் இருமல் – தும்மலுக்குப் பிறகும் கழிப்பறைகளைப் பயன்டுத்திய பிறகும், உணவை கையாளும் போதும் அல்லது உணவை தயார் செய்யும் போதும், தங்களது கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் நாம் இருக்கும் இடங்களை நல்ல சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2.      வெறும் கையால் கண்கள் மற்றும் மூக்கினைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3.      கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது அனைவரும் முகமூடிகளை அணிந்து செல்ல வேண்டும்.
4.      மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் போதும், நோயாளிகளின் பொருட்களை கையாளும் போதும் முகமூடிகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
5.      இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது, வாய், மூக்கை மறைப்பதற்காக வெறும் கைகளைப் பயன்படுத்தாமல் பருத்துத் துணி மற்றும் டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். பின்னர் பயன்படுத்திய அனைத்தையும் முழுவதுமாக அப்புறப் படுத்த வேண்டும். கைக்குட்டை மற்றும் டிஸ்ஸு கிடைக்காத நேரங்களில் கைகளின் மேல் பகுதிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் உடனே கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
6.      ஒழுங்கான சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கொடூரமான வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாகத் தப்பித்துக் கொள்ளலாம்.
7.      காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கழுவிய பிறகு உட்கொள்ள வேண்டும்.
8.      ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைபிடித்தல், உடற் பயிற்சி செய்தல், நல்ல தூக்கம் போன்றவற்றைக் கடைபிடிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். கொரோனா வைரஸ் போன்ற பல தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக