கொரோனா
வைரஸைக் கண்டு உலகமே அஞ்சிக் கொண்டிருக்கிற வேளையில், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முனு்பாகவே
அகத்திய முனிவர் இந்த வைரஸ் தொற்று குறித்தும் அதனாால் ஏற்படும் விளைவு குறித்தும்
தன்னுடைய பாடலில் எழுதி வைத்திருக்கிறார். அதுபற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
கொரோனா எனும் கொடூரம்
உலகையே
மிகக் கொடூரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் பற்றிய மருத்துவக்
காரணங்கள், அறிகுறிகள், எப்படி பரவுகிறது, எங்கிருந்து வந்தது என்று பல
கண்டுபிடிப்புகள் இது முதன்முதலில் பரவத் தோன்றிய சீனா முதல் உலக நாடுகள்
முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்தவொரு
உறுதியான முடிவுக்கும் வர முடியாமல் தவிக்கிறார்கள்.
பாம்பின்
இறைச்சியில் இருந்து மட்டும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என்றும் அந்த வைரஸ்
தொற்று எங்கிருந்து யாரிடமிருந்து பரவியது என்று மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற ஒரு கொடூரமான வைரஸ் பாம்பின்
விஷத்தில் இருந்தும் உருவாகும் என்றும் இந்த உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ்
தொற்றுக்கும் சிவபெருமானுக்குமே சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சித்தர்கள்
தங்களுடைய ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
பாற்கடல் அமுதமும் விஷமும்
மேரு
மலையை மத்தாகவும் பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடந்து அதிலிருந்து
அமுதம் கிடைத்த கதை நமக்குத் தெரியும். அப்படி இரண்டு புறமும் தேவர்களும்
அசுரர்களும் கயிறாகக் கட்டி பாம்கை இழுத்த போது, அது விஷத்தைக் கக்கியது. அப்படி
பாம்பால் கக்கப்பட்டது விஷம் கிடையாது. அதுதான் கொரோனா வைரஸ் என்றும் அது மிகக்
கொடுமையானது என்றும் சொல்லப்படுகிறது. ஆமாங்க. சிவபெருமான் விழுங்கினது பாம்போட
விஷம் என்னும் கொரோனா விஷம் தானாம்.
சிவன்
விஷத்தை விழுங்கியதால் ஏற்பட்ட விளைவும் இப்போது கொரோனா தாக்கியிருக்கும் விளைவும்
கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறது.
அகத்தியர் பாடல்
அகத்திய
முனிவர் தன்னுடைய ஒரு பாடலில், கொரோனா வைரஸ் என்ற பெயரில்லாமல், பாம்பிலிருந்து
உருவாகின்ற வைரஸ் எப்படி உருவாகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
தன்னுடைய பாடலில் விவரித்துக் கூறியிருக்கிறார். அந்த பாடலை இங்கே பார்க்கலாம்.
“சர்ப்பமுண்டு
சர்வ நோயுமுண்டு கர்ப்பமறியா கன்னியும்
வாயு
பகவான் பகைகொண்டு பித்தம் சித்தம் சிதை கொள்வாள்”
பாடலின்
அர்த்தம்
இந்த
பாடலின் அர்த்தம் என்னவென்றால், பாம்பை சாப்பிடுகின்றவர்களுக்கு இந்த உலகத்தில்
உள்ள எல்லா நோய்களும் ஒன்று சேர்ந்தது போல, அதிக உடல் பலமாக இருக்கின்றவர் குழந்தை
பெற்றுக் கொள்ளாத கன்னிப் பெண்ணால் கூட தாங்கிக் கொள்ள முடியாத, நுரயைீரலைத்
தாக்கி உயிரையே அழிக்கத் துணியும் நோய்க்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடுகிறார்
அகத்தியர்.
கொரோனாவை விழுங்கிய சிவபெருமான்...
இந்த
கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கும் சிவபெருமானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்று
தெரியுமா?... ஆம் தொடர்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும்
பாம்பைக் கயிறாகக் கொண்டு இழுத்த போது, பாம்பு விஷத்தைக் கக்கியது. அந்த விஷம்
மிகவும் கொடியது என்பதால் தான் சிவபெருமான் அதை எடுத்து விழுங்கி, தன்னுடைய
தொண்டையிலேயே நிறுத்திக் கொண்டார். அந்த விஷம் நம்முடைய உடலில் பரவினால் உடல் நீல
நிறமாக மாறத் தொடங்கும். ஆனால் சிவன் தொண்டையிலேயே அடக்கிக் கொண்டதால்
தொண்டைப்பகுதி மட்டும் நீலநிறமாகி, நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார். அதோடு பாம்பை
தன்னுடைய கழுத்தில் தாங்கி, தன்னை வணங்கும்போது அந்த பாம்புமு்
வழிபாட்டுக்குரியதாக மாறும் என்று அந்த பாம்புக்கு மரியாதையும் அந்தஸ்தும்
கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்.
கொரோனா தொற்றுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு?
சிவன்
விழுங்கியது கொரோனா வைரஸ் தான் என்றும் ஏனென்றால் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின்
நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. வலிப்பு, மூளை நரம்புத் தாக்குதல்
ஏற்படுவதோடு இறப்பும் நேருகிறது. சிவனுக்கு தொண்டை நீலமானது போல இந்நோய்
தாக்குபவர்களின் உடல் நீலநிறமாக மாறுகிறது.
இப்படி
சிவனுக்கும் பாம்புக்கும் இருக்கும் இந்த தொடர்பை அறியாத சீனா போன்ற மேற்கத்திய
நாட்டினர் பாம்பை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். அதன் தீவீரம் புரியாமல் பல
நோய்த்தொற்றுக்கு ஆளாவதோடு உலகம் முழுவதும் பரப்பி விட்டுவிடுகின்றனர். அது
உலகத்தையே அச்சுறுத்த ஆரம்பித்து விடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக