சியோமி
நிறுவனத்தின் ரெட்மி ரசிகரா நீங்கள்? அதிலும் குறிப்பாக சமீபத்தில் அறிமுகமான ரெட்மி
நோட் 8 ப்ரோவின் ரசிகரா நீங்கள்? ஆம் என்றால் நீங்கள் இதை படிக்காமல் இருப்பதே நல்லது.
ஏனெனில் சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் எவ்வளவு
மோசமானதாக இருக்கிறது என்பதை பற்றிய தொகுப்பே இது.
கழுவி
கழுவி ஊற்றிய கேமரா ரேட்டிங் தளம்!
அட்டகாசமான
வன்பொருள் அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் கூட, ரெட்மி நோட் 8 ப்ரோ
ஸ்மார்ட்போனின் கேமராக்களை பிரபல DxOMark ரேட்டிங் "கழுவி கழுவி ஊற்றியுள்ளது".
தெரியாதவர்களுக்கு, DxOMark ரேட்டிங் என்பது DxOMark இமேஜ் லேப்ஸிற்கு சொந்தமான
ஒரு மதிப்பீட்டு வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளம் ஸ்மார்ட்போன்களின் கேமராக்களை
பரிசோதனை செய்வதில் சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது.
ரெட்மி நோட் 8 ப்ரோ
கேமராவிற்கு என்ன ரேட்டிங்?
இந்த
வலைத்தளம் நிகழ்த்திய சமீபத்திய கேமரா பரிசோதனையில், சியோமி நிறுவனத்தின் ரெட்மி
நோட் 8 ப்ரோ கேமரா எடுத்த மொத்த மதிப்பெண் வெறும் 84 மட்டுமே ஆகும். இந்த இடத்தில
DxOMark ரேட்டிங் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் ஹூவாய் மேட் 30
ப்ரோ 5G கேமராவின் மதிப்பெண் ஆனது 123 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி
நோட் 8 ப்ரோவின் மொத்த கேமரா ஸ்கோர் 84 ஆக இருக்க, இந்த ஸ்மார்ட்போன் ஆனது கேமரா
ஸ்டில் ஃபோட்டோ பிரிவில் 87 மதிப்பெண்களும் மற்றும் வீடியோ பிரிவில் 78
மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
புகைப்படங்களில் என்ன
குறை?
புகைப்பட
வகையைப் பொறுத்தவரை, ஆட்டோஃபோகஸ் சோதனைகளில் ஒப்பீட்டளவில் நல்ல செயல்திறன்,
பொக்கே மோட்-ல் பொருளை சிறந்த முறையில் தனிமைப்படுத்தல் மற்றும் குறைந்த
சுற்றுப்புற ஒளி மட்டங்களில் ஃபிளாஷ் பயன்படுத்தும் போது நல்ல வெளிப்பாடு ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு இதற்கு 87 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,
ஒரு பெரிய சென்சார் இடம்பெற்றிருந்தாலும் கூட, புகைப்படங்களில் மிகச்சிறந்த விவரம்
இல்லாதது உட்பட ரெட்மி நோட் 8 ப்ரோவின் கேமராவில் முன்னேற்றம் தேவைப்படும் பல
பகுதிகள் உள்ளதாக DxOMark ரேட்டிங் குறிப்பிட்டுள்ளது.
வீடியோவில் என்ன
குறை?
மறுகையில்
உள்ள வீடியோ வகையைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 8 ப்ரோவின் கேமரா அமைப்பு 78
மதிப்பெண்கள் பெற்று DxOMark தரவரிசை பட்டியலின் அடிபாதாளத்தில் உள்ளது. வீடியோ
பதிவின் முடிவுகள் ஆனது, பொதுவெளியில் அல்லது வழக்கமான உட்புற நிலைமைகளின் கீழ்
பதிவுசெய்யும்போது நல்ல வெளிப்பாட்டைக் காண்பிக்கிறது, ஆனாலும் கூட
புகைப்படங்களைப் போலவே, வீடியோ காட்சிகளிலும் பல சிக்கல்கள் உள்ளன, அவை
மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் DxOMark ரேட்டிங் குறிப்பிட்டுள்ளது. மேலும்,
ரெட்மி நோட் 8 ப்ரோ 4 கே வீடியோவைப் பதிவுசெய்யும் திறன் கொண்டது, ஆனால் 4 கே
பதிவில் போதுமான விவரங்கள் இல்லை, அவைகள் மிகவும் குறைவாக உள்ளன என்றும் DxOMark
ரேட்டிங் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் ரெட்மி
நோட் 8 ப்ரோவின் விலை:
சியோமி
நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் ரெட்மி நோட் 8 ப்ரோவை
அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்
வேரியண்ட்டின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்
வேரியண்ட்டின் விலை ரூ.15,999 என்றும், டாப்-எண்ட் மாடல் ஆன 8 ஜிபி ரேம் + 128
ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 17.999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது காமா கிரீன், ஹாலோ ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் போன்ற மூன்று வண்ண
விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி குறிப்பு 8
ப்ரோவின் அம்சங்கள்:
அம்சங்களை
பொறுத்தவரை, டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஆனது 6.53 இன்ச்
ஃபுல் எச்டி+ (1080x2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 19.5: 9 என்கிற திரை விகிதத்துடன்
கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை
பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வாட்டர் டிராப்-ஸ்டைல் வடிவமைப்பில் ஒரு 20
மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. தவிர ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி SoC
ப்ராசஸர், தீவிரமான கிராஃபிக் கேம்களை விளையாடும்போது வெப்பத்தை குறைக்க லிக்விட்
கூலிங் டெக்னாலஜி, 18W வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி,
ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான MIUI 10, 64 எம்பி கேவாட்-கேமரா அமைப்பு போன்ற
பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக