யுவ ஸ்வபிமான்
யோஜனா மூலம் முதலமைச்சர் கமல் நாத் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளார்.
உலக
பொருளாதார மாநாடு
மத்திய
பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சமீபத்தில்
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டிற்கு
சென்றார். அங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள்,
பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பை பெருக்குதல் ஆகியவை பற்றி முதலீட்டாளர்கள்
முன்னிலையில் விளக்கினார்.
உ.பி. முதல்வர் கமல்
நாத்
இதன்பிறகு
நாடு திரும்பிய அவர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். யுவ
ஸ்வபிமான் யோஜனா மூலம் வேலையில்லாதோருக்கு ஊக்கத்தொகையை அதிகரித்து
உத்தரவிட்டுள்ளார். மேலும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் காலத்தையும்
அதிகரித்துள்ளார். கமல் நாத் அரசின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டம்
யுவ ஸ்வபிமான் யோஜனா ஆகும். இது ஜனவரி 31, 2019ல் மத்தியப் பிரதேசத்தில்
தொடங்கப்பட்டது.
யுவ ஸ்வபிமான் யோஜனா
இதன்மூலம்
100 நாட்கள் உத்தரவாத வேலையும், வேலையற்ற இளைஞர்களுக்கு நிதியுதவியும்
வழங்கப்பட்டு வருகிறது. இதன் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தை வரும் பிப்ரவரி ஒன்றாம்
தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக அம்மாநில மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பிசி ஷர்மா
தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,
இந்த திட்டத்தை வேலையற்ற இளைஞர்களின் நலன் கருதி மறுசீரமைப்பு செய்துள்ளோம்.
100 நாட்கள்
வேலைவாய்ப்பு
இதன்மூலம்
அவர்களுக்கான நிதியுதவி ரூ.1,000ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல்
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை தற்காலிக வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் 365
நாட்களாக உயர்த்த அரசு தயாராக உள்ளது. கடந்த ஓராண்டாக யுவ ஸ்வபிமான் யோஜனாவின்
செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இதற்காக பொதுமக்களிடம்
இருந்து கருத்துகள் கேட்கப்பட்டன.
நிதியுதவி அதிகரிப்பு
இந்த
திட்டத்திற்காக மாநில பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்
நோக்கம் ரூ.200 கோடி செலவில் 25,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும். பதிவு
செய்து காத்திருக்கும் வேலையற்ற இளைஞர்களை தேர்வு செய்து தகுதியின் அடிப்படையில்
தற்காலிக வேலை வழங்க நகர்ப்புற மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்காக
இளைஞர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்.
வேலையின்மை
அதிகரிப்பு
மத்திய
பிரதேசத்தில் அக்டோபர் 2018 நிலவரப்படி கல்வி பயின்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின்
எண்ணிக்கை 20.77 லட்சம் ஆகும். இது அக்டோபர் 2019ல் 27.79 லட்சமாக
அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் கமல் நாத் கூறியுள்ளார். இதில் கடந்த ஆண்டு
நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 17,506 பேர் வேலை பெற்றுள்ளனர். மேலும் 25
புதிய நிறுவனங்கள் மூலம் 13,740 பேர் வேலைவாய்ப்பை உருவாக்கி கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக