Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜனவரி, 2020

கூட்ட நெரிசல் இல்லாமல் செல்ல எலும்புக்கூடுடன் காரில் பயணம் செய்த முதியவர்.!

கூட்ட நெரிசல் இல்லாமல் செல்ல எலும்புக்கூடுடன் காரில் பயணம் செய்த முதியவர்.!


மெரிக்காவில் தற்போது ஒரு சில மாகாணங்களில் உள்ள சாலைகளில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால்அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர்.
அந்த வழித்தடத்தில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும்அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் சில வாகன ஓட்டிகள் காரில் தங்களுடன் மற்றோருவர் இருப்பதுபோல் காட்டி கொண்டு விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணம் செய்கின்றனர். அவர்களை அவ்வப்போது போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 62 வயது மதிப்புத்தாக்க முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணம் செய்யவேண்டும் என எண்ணி தன்னுடைய காருக்குள் எலும்புக்கூடு ஒன்றிற்கு தொப்பி போட்டு காரின் முன் பகுதியில் அமர வைத்து காரை ஓட்டி சென்று உள்ளார்.
காரில் வேறொருவர் இருப்பதற்கு பதிலாக எலும்புக்கூடுஇருப்பதை போலீசார்  பார்த்து உள்ளனர்.பின்னர் உடனடியாக காரை நிறுத்தி முதியவரை பிடித்து அவருக்கு அபராதம் விதித்தனர்.மேலும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக