ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு
அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட
நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு
கூறியது.
இந்த
உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.ஆர்.பாண்டியன்
சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த
மனுவில்,மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற சுற்றறிக்கை அரசியல் சாசனத்துக்கு
எதிரானது என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை
செயல்படுத்த தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக