Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜனவரி, 2020

மருத்துவ அலட்சியம்.! பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் விபரீதம்.!

மருத்துவ அலட்சியம்.! பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் விபரீதம்.! 

டலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரியாவிற்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். பிரசவத்தின் போது வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக துணியை வைத்து தைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள், பச்சிளம் குழந்தையுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
பின்னர் இந்த சம்பவத்தை அறிந்து அந்த இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர், பெண் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக