Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜனவரி, 2020

போண்டா சாப்பிட்ட சென்னை பெண் திடீர் மரணம்: பெரும் பரபரப்பு

போண்டா சாப்பிட்ட சென்னை பெண் ஒருவர் தொண்டையில் போண்டா சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி என்பவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார் போண்டா வாங்கி மகளுக்கு ஆசையாக கொடுத்துள்ளார்.

அந்த போண்டாவை பத்மாவதி சாப்பிட்டபோது திடீரென போண்டா அவரது தொண்டையில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுஇதனையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அவரது தாயார் மற்றும் கணவர் கொண்டு சென்றனர்.

 ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

போண்டா சாப்பிட்டபின் தொண்டையில் சிக்கி திடீரென பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக