தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை
கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப்
பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும் பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக
உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில்,
இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு
நிதி வழங்குதல் போன்ற விஷயங்களில் பிரேசில் நாட்டுடன் குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையில்
இருதரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு இது உதவும் இந்த ஒப்பந்தம் என்றும், மேலும்,
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்செனாரோ பங்கேற்க
உள்ளநிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், பிரேசில் நாட்டின்
குடியுரிமை அமைச்சகத்திற்கும் இடையே, மழலைப் பருவ துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்காக
கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்த்ஹங்களின்
மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக