உத்தரபிரதேசத்தில் படகு மூலம் காக்ரா ஆற்றை கடக்க முயன்ற போது
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர்களில் 11 பேரின் கதி என்ன ஆனது என்பது
தெரியவில்லை.
உத்தரபிரதேச
மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உம்ரிபேகம் கஞ்ச் பகுதியில் விவசாயிகள் சிலர் தங்கள்
வயலுக்கு செல்வதற்காக படகில் காக்ரா ஆற்றை கடக்க முயன்றனர்.
அந்த படகில்
மொத்தம் 25 பேர் இருந்தனர். அப்போது அந்த படகு ஒரு பாலத்தில் மோதி கவிழ்ந்தது.
படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இதில் 14 பேரை அங்கிருந்தவர்கள்
உதவியுடன் போலீசார் மீட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக