நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கான முன்னெட்டமாக
அன்மையில் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பை ஆரம்பித்தார்.மேலும்
மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் பட்ஜெட் பிப்ரவரி 1 தேதி தாக்கல் செய்ய
உள்ளது.தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் நடுத்தர
மற்றும் ஏழைகள் மக்கள்,அன்றாட வேலைக்கு போய் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற
பட்ஜெட் ஆக இருக்க வாய்ப்புள்ளதா.? பொருளாதார மந்தநிலை மற்றும் வீழ்ச்சியை சமாளிக்க
ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை நீதியமைச்சர் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
மேலும்
நாட்டின் ஆனது நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த
அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது. இதில் குறிப்பாக உற்பத்தித் துறை
மற்றும் கட்டுமானத் துறை மிகவும் மோசமாகச் செயல்பட்டது, அதனோடு
வேலைவாய்ப்புயின்மை அதிகரிப்பு ஆகியாவற்றால் வளர்ச்சி குறைந்தது என மத்திய
அரசின் புள்ளிவிவரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதரத்தில்
நடப்பு நிதியாண்டில் மட்டும் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக
குறைந்தது.அதே போல் 2வது காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் கீழ்நோக்கி
வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு மோசமாகிய
நிலையில் பொருளாதார வளர்ச்சி மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று
குற்றம் சாட்டப்பட்டது அதோடு மட்டுமல்லாமல் அரசு வேலைவாய்ப்பைப்
பெருக்கவில்லை,பெரும் வீழ்ச்சி கண்ட கட்டமைப்பு திட்டங்களுக்குச் செலவிடவில்லை என
அரசியல் வட்டாரங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வருமான
வரி அடுக்குகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் :
பெரும்
நிறுவனங்களின் வளர்ச்சியை மையமாக கொண்டு கார்பரேட் நிறுவனங்களின் வரியை 30
சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும்
ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் 30 சதவிகிதம் வரை வரி
செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் வாங்கும் சக்தியை அதிகரிக்கும்
நோக்கத்தில் இவர்களுடைய வரி வரம்பு ஆனது மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
நிதி அமைச்சர் பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டாவது மத்திய பட்ஜெட்டில்
இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியானால் வருமான வரி அடுக்குகளும்
புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக