கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக
மற்றும் பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட
பாஜக 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.அதிமுகவும் ஒரு தொகுதியில் மட்டுமே
வெற்றிபெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மட்டுமே
போட்டியிட்டது.கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை.இதனையடுத்து தமிழகத்தில்
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக
உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்
தேர்தல் நடைபெற்றது.
அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக
கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட
நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி
பெற்றுள்ளது.
ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பை
தவறவிட்டுள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக கடும்
நெருக்கடி கொடுத்தது.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று
முடிந்த பின்னர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சற்று சலசலப்பு அதிகமாகி
வருகிறது.இதன் ஒரு பகுதியாக முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜகவின்
மூத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜகவின்
காலம் தமிழகத்தில் தொடங்கி விட்டது.
உள்ளாட்சி தேர்தல்
முடிவுகள், தமிழகத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி
பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம்
என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.
ஆனால் இவரின் கருத்துக்கு
அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.மேலும் பாஜக மாநிலத் தலைவர் பதவி
கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் என்று
விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன்
பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விழா
நடைபெற்றது.இந்த விழாவில் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன்
பேசுகையில், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றோம்.
எங்களின் அமைச்சரவையிலே குடியுரிமை சட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து
அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக