இந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9x ஸ்மார்ட்போன்
வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹானர்
நிறுவன இந்திய தலைவர் சார்லெஸ் பெங், சமீபத்தில் ஹானர் 9x ஸ்மார்ட்போனின் இந்திய
வெளியீட்டு விவரங்களை வெளியிட்டார். ஹானர் 9x வெளியீடு ப்ளிப்கார்ட்
தளத்தில் டீசர் மூலம் வெளியிடப்பட்டது.
ஜனவரி
14 ஆம் தேதியன்று ஹானர் 9x மட்டுமே அறிமுகம் ஆகுமா அல்லது ஹானர் 9 எக்ஸ் ப்ரோவும்
வெளியாகுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் ஹானர் 9 எக்ஸ் மட்டுமே
இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
எதிர்ப்பார்க்கப்படும் விலை விவரம்:
1.
4GB RAM + 64GB ரூ. 14,400
2.
6GB RAM + 64GB ரூ. 16,500
3.
6GB RAM + 128GB ரூ. 19,600
கடந்த
ஆண்டு வெளியாகி இருக்க வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் தாமதமாக வந்தாலும்
எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஹானர் 9x ஏற்கனவே சீனாவில் அறிமுகம்
செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக