இஸ்ரோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய 'NavIC'
என்ற இந்திய ஜிபிஎஸ் சேவையை ஆதரிக்கக்கூடிய சிப்செட்களை உருவாக்குவது குறித்து
பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான
இஸ்ரோ, சியோமி நிறுவனத்துடன் இணைந்து நாவிக்(NavIC) என்றழைக்கப்படும் இந்திய
ஜிபிஎஸ் சிஸ்டத்தை ஆதரிக்கக்கூடிய சிப்செட்களை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையை
இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாவிக் (NavIC) என்பது குளோபல்
பொசிஷனிங் சிஸ்டத்தின் (ஜி.பி.எஸ்
நாவிக் (NavIC) என்பது குளோபல்
பொசிஷனிங் சிஸ்டத்தின் (ஜி.பி.எஸ்) இந்தியப் பதிப்பாகும் என்று இஸ்ரோ அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ மற்றும் சியோமி நிறுவனங்களுக்கு இடையிலான இந்த
பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் சியோமி ஸ்மார்ட்போன் சாதனங்கள் தான் NavIC ஆதரவுடன்
களமிறங்கும் முதல் சாதனங்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குவால்காம் சிப்களில் நாவிக் சேவை
குவால்காம் நிறுவனம் அடுத்து
வெக்கியிடும் இந்திய சிப்புகளில் நாவிக் ஆதரவு இருக்குமென்றும், அதை குவால்காம்
வெளியிடுமென்றும் அறிவித்துள்ளது. இப்போது, சியோமி நிறுவனம் நாவிக் ஆதரவுடன்
கிடைக்கும் சிப்செட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல் 3ஜிபிபி
(3GPP) முன்பே நாவிக் சிப்செட்களுக்கான அனுமதியை வழங்கிவிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பிற நாடுகளில் உள்ள ஜிபிஎஸ் சேவைகள்
இந்தியப் பிராந்திய ஊடுருவல்
செயற்கைக்கோள் அமைப்பின் (IRNSS) செயல்பாட்டுப் பெயர் தான் நாவிக் (NavIC). NavIC
என்பது குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் (ஜி.பி.எஸ்) இந்தியப் பதிப்பாகும். இதேபோல்
பிற வழிசெலுத்தல் அமைப்புகளும் உள்ளன. உதாரணமாக, சீனாவின் பீடோ(BeiDou) அல்லது
Beidou Navigation Satellite System (BDS) உள்ளது.
குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்
இவை அனைத்தும் செயற்கைக்கோள்
வழிசெலுத்தலை அடிப்படையாகக் கொண்டது. ரஷ்யாவிற்கு அதன் சொந்த குளோனாஸ் அல்லது
"குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்" என்ற ஒன்றை வைத்துள்ளது.
ஏற்கனவே பல நாடுகளில் பல தொலைப்பேசிகள் ஏற்கனவே ஜி.பி.எஸ், குளோனாஸ் மற்றும்
பீடோவை (BeiDou) ஆதரிக்கின்றது எனது குறிப்பிடத்தக்கது.
மிகத் துல்லியமான இந்தியா
NavIC ஆதரவை ஆதரிக்கும் சிப்செட்டுகளை
தற்போது குவால்காம் தயாரித்து வருகிறது. மேலும் மிகத் துல்லியமாக இந்தியாவில்
பயனர்களுக்கு இடங்களின் தகவல்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்
உள்ள பயனர்களுக்கும், இந்தியாவின் எல்லைகளிலிருந்து 20 மீட்டர் முதல் 1,500 கி.மீ.
வரை மிகத் துல்லியமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக