பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்!
ஒருவழியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 தொடரின் கீழ் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. எக்கச்சக்கமான
லீக்ஸ் தகவல்களுக்கு பிறகு, கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது மூன்று 12 எம்பி கேமராக்களை
கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகியுள்ளது.
கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பானது, லீக்ஸ்
தகவல்கள் சுட்டிக்காட்டியதைப் போலவே, வெண்ணிலா கேலக்ஸி நோட் 10 போலவே உள்ளது. உடன்
இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவில் மையமாக நிலைநிறுத்தப்பட்ட ஹோல்-பன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை
கொண்டுள்ளது.
இதுவொரு கேலக்ஸி நோட்-சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருப்பதால்,
கேலக்ஸி நோட் 10 லைட் ஒரு எஸ் பென்னுடன் வருகிறது, மேலும் இது பாதுகாப்பு மற்றும்
அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்ரையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை &
கிடைக்கும் தன்மை!
துரதிர்ஷ்டவசமாக, கேலக்ஸி நோட் 10
லைட்டின் விலை தொடர்பான விவரங்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் இது 6
ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு
வகைகளில் வரும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆரா க்ளோ, ஆரா பிளாக்
மற்றும் ஆரா ரெட் கலர் போன்ற வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். அடுத்த வாரம்
ஜனவரி 7 ஆம் தேதியன்று நடக்கும் CES 2020 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் விலை
அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்
டிஸ்பிளே & எஸ் பென் பற்றி...
சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஆனது
6.7-இன்ச் அளவிலான முழு எச்டி+ (1080 x 2400 பிக்சல்கள்) 394 பிபிஐ பிக்சல்
அடர்த்தி கொண்ட இன்பினிட்டி-ஓ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன்
வடிவமைப்பு கேலக்ஸி நோட் 10 இல் நாம் பார்த்ததைப் போலவே உள்ளது, இருப்பினும், இதன்
மூலைகள் இன்னும் கொஞ்சம் வட்டமானவைகளாக உள்ளது மற்றும் இதன் கன்னம் சற்று தடிமனாக
உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, இது ப்ளூடூத் லோ-எனர்ஜி
வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைக்கிறது மற்றும் மல்டிமீடியா கட்டுப்பாடு, ஒரு படத்தைக்
கிளிக் செய்தல் மற்றும் ஏர் கமாண்ட்கள் போன்ற வழக்கமான அம்சங்களையும் வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்
ப்ராசஸர் & மெமரி பற்றி...
கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது 10nm ஆக்டா
கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ப்ராசஸரின் தயாரிப்பை பற்றி சாம்சங் எதுவும்
குறிப்பிடவில்லை, ஆனால் முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களோ இதில் இருப்பது எக்ஸினோஸ்
9810 என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், கேலக்ஸி நோட் 10 லைட்டுக்குள் உள்ள
ப்ராசஸர் ஆனது விற்பனையாகும் சந்தைக்கு ஏற்ப மாறுபடலாம் என்பது வெளிப்படை. அதாவது
இந்த ஸ்மார்ட்போனின் ஒரு ஸ்னாப்டிராகன் மாடல் வெளியாகலாம் என்று அர்த்தம். மெமரியை
பொறுத்தவரை, கூறப்பட்டுள்ள 10nm SoC ஆனது 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்
கேமராக்கள் பற்றி...
இமேஜிங் துறைக்கு வரும் கேலக்ஸி நோட்
10 லைட் ஆனது ஒரு சதுர வடிவிலான தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள மூன்று பின்புற
கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமராவானது டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ்,
எஃப் / 1.7 லென்ஸ் மற்றும் ஓஐஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது உடன் 12 மெகாபிக்சல்
(எஃப் / 2.2) அளவிலான வைட் ஆங்கிள் கேமரா + 12 மெகாபிக்சல் (எஃப் / 2.4)
டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஒரு 32 மெகாபிக்சல்
(எஃப் / 2.2) அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் பேட்டரி
பற்றி...
கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது கஸ்டம்
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட ஒரு 4,500 எம்ஏஎச்
பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. முன்னரே கூறியபடி இது இன்-டிஸ்பிளே கைரேகை
சென்சாரை கொண்டுள்ளது. தவிர இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரையிலான மெமரி
நீடிப்பை வழங்கும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் வருகிறது. அளவீட்டை
பொறுத்தவரை, கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது 76.1 x 163.7 x 8.7 மிமீ மற்றும் 199
கிராம் எடையும் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக