Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 4 ஜனவரி, 2020

முதன் முறையாக மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

முதன் முறையாக மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

கார்த்தி நடிப்பில் கைதி, தம்பி பட வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்களை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சரித்திர படம் உருவாக வருடக்கணக்கில் ஆகும். இருந்தாலும் அதற்கடுத்ததாக பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளாராம். அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, இரும்புத்திரை & ஹீரோ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்
அது போக, கொம்பன் பட இயக்குனர் முத்தையாவிடமும் ஒரு கதை கேட்டுள்ளாராம். 

கொம்பன் முத்தையா இதற்கு முன்னர் இயக்கிய குட்டிப்புலி, தேவராட்டம் போன்ற படங்கள் சாதிய அடிப்படையிலான படங்கள் என சர்ச்சை நிலவியது. கார்த்தி இதுவரை ஒரு இயக்குனருடன் ஒருமுறை மட்டும் தான் பணியாற்றியுள்ளார். 

தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்தால், தன் பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைவது முதல்முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!