Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 பிப்ரவரி, 2020

மனைவியின் தலையோடு 1.2 கிலோமீட்டர் சுற்றித்திறந்த கணவன் பதறவைக்கும் தலை பின்னனி

மனைவியின் தலையோடு 1.2 கிலோமீட்டர் சுற்றித்திறந்த கணவன் பதறவைக்கும் தலை பின்னனி



த்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேந்தவர் அகிலேஷ் ராவத். இவருடைய மனைவி ரஜனி. அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையானது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது.
இதன் பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொண்டே வந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது அப்போது அகிலேஷ் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி அவரை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து தள்ளி உள்ளார். அதன் பின் ரஜனியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கி உள்ளார்.இரத்த வெள்ளத்தில் கிடந்த ரஜனி படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான போதும் அவரை விடாமல் கணவன் பட்டப்பகலில் அவருடைய தலையை வெட்டி அதை கையில் எடுத்துக் கொண்டு 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கையில் தலையோடு அங்கிருந்த காவல் நிலையத்தை நோக்கி சென்ற அவரைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அவரிடம் இருந்து தலையை பறிக்க முயன்றனர். இதனை அடுத்து கொடூர கணவன் தேசிய கீதம் படித்த படியும், பாரத் மாதாகீ ஜே என்று சொன்னபடியே இருந்து உள்ளார். இவ்வாறு கூறிக்கொண்டே இருந்த போது ஒரு வழியாக தலையைப் பறித்த காவல்துறை அவரை கைது செய்தது.
இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை பதற வைத்துள்ளது.இந்த கொடூரம் தொடர்பாக அம்மாவட்ட எஸ்பி.,கூறுகையில் குடும்பத்தகராறில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்து வந்துள்ளார் என்று தெரிவித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக