பெரம்பலூரிலிருந்து ஏறத்தாழ 65கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து ஏறத்தாழ 80கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம் தான் கோரையாறு நீர்வீழ்ச்சி.
சிறப்புகள் :
பசுமையான இயற்கை எழில் சூழ்ந்த பச்சை மலை அடிவாரத்தில் அழகாக காட்சியளிக்கும் கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துச் செல்கின்றனர்.
இயற்கைக்கு கொடையாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆறுகளைக் கடந்து செல்வது ஒரு சுவாரஸ்ய பயணமாக இருக்கும்.
இந்த அருவி கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் இருப்பதால் உயரத்தில் இருந்து விழும் நீர்களின் காட்சிகளை பார்க்கும்போது நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
இங்கு வீசும் குளிர்வான தென்றல் காற்று, மேகக் கூட்டங்கள் தவழும் இயற்கை காட்சிகள் பார்ப்பதற்கு நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.
குடும்பத்துடன் இந்த அருவிக்கு சென்றால் அங்கிருக்கும் மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழலாம்.
எப்படிச் செல்வது?
பெரம்பலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பெரம்பலூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
பச்சை மலை.
ரஞ்சன்குடி கோட்டை.
சாத்தனூர் கல்மரம்.
மயிலூற்று அருவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக