Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

தாய்லாந்தில் மனசாட்சி இல்லாமல் 26பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை.!


பணய கைதிகளாக பலரை பிடித்த வைத்திருந்து உள்ளா

தாய்லாந்து நாட்டை சேர்ந்த பாங்காங் நகரில் இருந்து சுமார் 250கி.மீ தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் அமைந்த வணிக வளாகத்தின் முன்பு நேற்று மதியம் கார் ஒன்று வந்து நின்றது, அதில் இருந்த இறங்கி ராணுவ வீரர் தீடிரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.


இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12பேர் பலியாகி உள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியானது, அதனை தொடர்ந்து அவர் பணய கைதிகளாக பலரை பிடித்த வைத்திருந்து உள்ளார். 

ராணுவ தளம்
குறிப்பாக இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே ஒரு புத்த கோவில் ஒன்றும் ராணுவ தளம் ஒன்றும் அமைந்துள்ளது,இந்த நிலையில் பலி எண்ணிக்கை 21ஆக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு 4நபர்களிக் உடல்களை வணிக வளாகத்தில் இருந்து சிறப்பு படையினர் கண்டெடுத்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்
13வயது சிறுவன்
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களை காண அந்நாட்டு பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா சென்றார். அதன்பின்பு வெளியே வந்த அவர் கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 13வயது சிறுவன் மற்றும் பாதுகாப்பு படையினரும் அடங்குவர். எங்களுடைய நாட்டில் முன் இதுபோல் நடந்தது இல்லை, இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என கூறினார்.
17 மணிநேர போராட்டத்திற்கு பின்
அந்த ராணுவ வீரர் தனது வீட்டை விற்பதில் அவருக்கு இடையூறு இருந்து வந்துள்ளது, தனிப்பட்ட விவகாரமே துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு காரணம் என பிரயூத் கூறியுள்ளார். குறிப்பாக 17 மணிநேர போராட்டத்திற்கு பின் இன்று அவர் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் அவருடன் சேர்த்து இந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்து உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ஜக்ரபந்த் தொம்மா
தாக்குதலுக்கு முன்பு, ஜக்ரபந்த் தொம்மா என்ற அந்த ராணுவ வீரர் அதனை ஃபேஸ்புக்கில் அறிவித்ததும் தற்போது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக