மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஜி பவர்
மற்றும் மோடடோரோலா ஜி லைடலஸ் என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது,
குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமெரிக்கா மற்றும் கனடாவிலும்
விற்பனைக்கு
வந்துள்ளது. விரைவில் இந்த
ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஜி பவர் மற்றும் மோடடோரோலா
ஜி லைடலஸ் சாதனங்களில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேஇ ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள்,16எம்பி
செல்பீ கேமரா,பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்
வழங்கப்பட்டுள்ளது.
ஜி
ஸ்டைலஸ்
குறிப்பாக ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை
கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, வரைபடம் உருவாக்குவது என
பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஸ்டைலஸ் சாதனம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து
இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ஸ்டைலசை
எடுத்து குறிப்புகளை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு
சாதனங்களில் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
மோட்டோ
ஜி ஸ்டைலஸ் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ்
ஐபிஎஸ் எல்சிடி மேகஸ் விஷன் டிஸ்பிளே (2300x1080 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்
665 பிராசஸர் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதி
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +
16எம்பி அட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
டூயல் சிம்
கைரேகை சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
10வாட் சார்ஜிங் ஆதரவு
3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ
ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 5
மோட்டோ
ஜி பவர் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ்
ஐபிஎஸ் எல்சிடி மேகஸ் விஷன் டிஸ்பிளே (2300x1080பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்
665 பிராசஸர் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி லென்ஸ் +
8எம்பி அட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
டூயல் சிம்
கைரேகை சென்சார்
பேட்டரி: 5000எம்ஏஎச்
10வாட் சார்ஜிங் ஆதரவு
3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ
ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 5
அட்டகாசமான
விலை
மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை
299,99டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,450)
மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனின் விலை
249,99டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,870)
மோட்டோ ஜி ஸ்டைலஸ் சாதனம் ஆனது
மிஸ்டிக் இன்டிகோ நிறத்தில் கிடைக்கிறது, அதேபோல் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன்
சாதனம் ஸ்மோக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக