Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

முரட்டுத்தனமான 6000mAh பேட்டரி + 64MP கேம்; Samsung ஒரு முடிவோடு தான் இருக்கு போல!



Samsung நிறுவனம் அதன் Galaxy M31 ஸ்மார்ட்போனை டீஸ் செய்துள்ளது. இது 64MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சாம்சங் நிறுவனத்தின் "மான்ஸ்டர்" என்று அழைக்கப்படும் 5000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் அதன் "மெகா மான்ஸ்டர்" ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. அது சாம்சங் கேலக்ஸி M31 எனும் பெயரின் கீழ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

மேலும் வெளியான லீக்ஸ் தகவலின்படி, கேலக்ஸி எம்30 ஆனது 64 மெகாபிக்சல் அளவிலான கேமரா மற்றும் 6000mAh எனும் பெரிய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
 
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வெளியாகும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 31 ஆனது கேலக்ஸி எம் 11, கேலக்ஸி எம் 21, மற்றும் கேலக்ஸி எம் 41 ஆகியவற்றுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டிற்கான புதிய கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக இருக்கும்.

கடந்த மாதம், கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் வைஃபை தரச்சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது, இது அதன் டூயல் பேண்ட் வைஃபை ஆதரவைக் குறிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (அவுட் ஆப் பாக்ஸ்) அடிப்படையிலான நிறுவனத்தின் சமீபத்திய ஒன் யுஐ கொண்டு இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி எம்31 அம்சங்கள்:

கடந்தகால அறிக்கைகளைப் பார்த்தால், சாம்சங் கேலக்ஸி எம்31 ஆனது எஸ்எம்-எம் 315 எஃப் / டிஎஸ் என்கிற மாடல் எண்ணின் கீழ், ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் வைஃபை அலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றது.

அதே மாதிரி எண் பெஞ்ச்மார்க் தளமான கீக்பெஞ்சிலும் காணப்பட்டது. அங்கு எக்ஸினோஸ் 9611 SoC மற்றும் 6 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை வெளிப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 11, கேலக்ஸி எம் 21 மற்றும் கேலக்ஸி எம் 41 ஆகியவற்றுடன் வரும் என்று நம்பப்படுகிறது, முன்னரே குறிப்பிட்டபடி, இவை அனைத்தும் 2020 ஆம் ஆண்டில் வெளியாகலாம் என்று வதந்திக்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள சாதனங்கள் ஆகும்.
 
தனது சொந்த சமூக ஊடக சேனல்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக சாம்சங் நிறுவனம் அதன் டீஸர்களை வெளியிடுவதற்கு யூடியூபர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தியின் வழியாக, சாம்சங் நிறுவனம் தனது சீன "சகாக்களுக்கு" கடுமையான போட்டியை கொடுக்க விரும்புவதை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

சாம்சங் இந்த உத்தியானது இந்திய சந்தையில் சில அதிர்வுகளை உருவாக்கவும், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மீதான அங்கீகாரத்தை பெருக்கவும் உதவுகிறது.

எது எப்படியோ சாம்சங் நிறுவனத்திடம் இருந்து 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட முரட்டுத்தனமான ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மேலும் எம்31 ஸ்மார்ட்போன் சார்ந்த அப்டேட்களுக்கு  பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக