Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

புதிய ஹோண்டா சிட்டி காரின் இந்திய வருகை எப்போது..?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு புதிய ரக வாகனங்கள் வரிசையாக அறிமுகம் செய்யப்படுவதற்கு மத்தியில், ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஐந்தாவது தலைமுறை மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சிட்டி செடான் மாடலை கார் அடுத்தாண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்தாண்டு தாய்லாந்தில் உலகப் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட இந்த கார், அதை தொடர்ந்து இந்தியாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. தற்போது புதிய கட்டமைப்புடன் 5வது தலைமுறை மாடலாக சிட்டி செடான் கார் நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடலைக் காட்டிலும், இதற்கான வரவேற்பு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தாய்லாந்தில் புதிய ஹோண்டா சிட்டி காரின் அறிமுகத்தை தொடர்ந்து, அங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் புக்கிங் குவிந்தது.

 தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலுக்கும், இந்தியாவில் அறிமுகம் காணவுள்ள மாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என அறியப்படுகிறது. ஆனால், இரண்டுமே தோற்றத்தில் ஒன்றுபோல இருக்கும் என ஹோண்டா நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதன்படி, நவீன சிறப்பம்சங்கள், பெரியளவிலான கிரில், முன்பக்கத்தில் பெரிய முகப்பு விளக்குகள், பெரியளவிலான 3டி டெயில் விளக்குகள், செங்குத்தாக்க நிலைநிறுத்தப்பட்ட ரிஃப்லெக்டார்கள் ஆகியவை இந்த புதிய காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலின் உட்புறம் முற்றிலும் கருப்பு இண்டீரியரில் காட்சியளிக்கும். மேலும் மறு உருவாக்கம் செய்யப்பட்ட டாஷ்போர்டு, ரீடிசைன் செய்யப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம், செங்குத்தான வடிவிலான ஏசி வென்ட்ஸ், மூன்று நிலை கொண்ட கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இயங்கும் சிறப்பம்சங்கள், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 8 அங்குலத்திலான தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இந்த காருக்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது விற்பனை இருந்து வரும் மாடலிலுள்ள அதே எஞ்சின் தேர்வுடன் தான் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால், அது பிஎஸ்-6 தேர்வுக்கு மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடலை கடந்தாண்டு டிசம்பரில் அறிமுகம் செய்தது. எனினும், பிஎஸ்-6 தேர்விலான டீசல் எஞ்சின் மாடல் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக