அரசாங்கத்திற்கு
சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (அ) பிஎஸ்என்எல் விரைவில்
4ஜி விரிவாக்கத்தைத் தொடங்கவுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பொதுத்துறை
நிறுவனங்களின் அதீத வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை அறிவித்தது.
முன்னதாக
மார்ச் 1 அறிமுகமாகும் என்று கூறப்பட்டது!
"ஏப்ரல்
1 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 19 மாதங்களில்
செயல்படுத்தப்படும்" என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ்
தோத்ரே நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார். இதற்கு முன்னதாக மார்ச் 1 ஆம் தேதியன்று,
பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகமாகும் என்று சில தகவல்கள்
வெளியாகின, தற்ப்போது அவைகள் பொய்யாகியுள்ளன.
பிஎஸ்என்எல் மூடப்பட
மாட்டாது!
பிஎஸ்என்எல்
மற்றும் எம்டிஎன்எல் மூடப்பட மாட்டாது என்றும், அரசு நிதியளிக்கும் தொலைதொடர்பு
ஆபரேட்டரை புதுப்பிப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு
மாநிலங்களவைக்கு உறுதியளித்த பின்னர் இந்த 4ஜி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்
வழியாக பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார்
தொலைதொடர்பு ஆபரேட்டர்களுடன் போட்டியிட பிஎஸ்என்எல்-க்கு ஏதுவாக இருக்கும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சிக்கல்கள் இருப்பதை
ஒற்றுக்கொண்டார்!
பிஎஸ்என்எல்
மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை இந்தியாவின் மூலோபாய சொத்துக்கள் என்றும் அவை இயற்கை
பேரழிவுகளின் போது மக்களுக்கு உதவியுள்ளன என்றும் தொலைத் தொடர்பு அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். உடன் அவை புத்துயிர் பெறுவதற்கான திட்டத்தில்
சிக்கல்கள் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். “பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்
மூடப்படும் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம். அவற்றில் ஒரு மறுமலர்ச்சி தொகுப்பை
நாங்கள் செலுத்தியுள்ளோம், இந்த நிறுவனங்கள் மூடப்படாது என்று நான் உங்களுக்கு
உறுதியளிக்கிறேன், ”என்று பிரசாத் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார்.
டவர்களை வைத்து
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிஎஸ்என்எல்!
உள்கட்டமைப்பு
பகிர்வுக்கு அனுமதிக்கும் அரசாங்கக் கொள்கையின்படி, பிஎஸ்என்எல் மற்றும்
எம்டிஎன்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் டவர்களை தனியார் தொலைத் தொடர்பு
ஆபரேட்டர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் டவர் சொத்துக்களை பணமாக
மாற்றுகின்றன. அதாவது பிஎஸ்என்எல் மற்றும் எம்என்டிஎல் நிறுவனங்கள் டவர்களை தங்கள்
சொந்த வணிகத்திற்காக பயன்படுத்துவதைத் தவிர, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ
மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவற்றுக்கு குத்தகைக்கு விடும், அதன் வழியாக பணம்
ஈட்டும். இதேபோல், இவ்விரு நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களிலிருந்து வாடகைக்கு
எடுக்கப்பட்ட டவர்களையும் பயன்படுத்துகின்றன
யார் யாருக்கு
எவ்வளவு டவர்கள்?
பிஎஸ்என்எல்
பகிர்ந்து கொண்டுள்ள 13,416 மொபைல் டவர்களில், ரிலையன்ஸ் ஜியோ 8,363 டவர்களையும்,
பார்தி ஏர்டெல் நிறுவனம் 2,779 டவர்களையும் மற்றும் வோடாபோன் ஐடியா 1,782
டவர்களையும் பயன்படுத்துகின்றன. மறுகையில் உள்ள எம்என்டிஎல் ஆனது 402 மொபைல்
டவர்களை பகிர்கிறது. அவற்றில் ஜியோ 137, ஏர்டெல் 100 மற்றும் வோடபோன்-ஐடியா 165
ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், ரிலையன்ஸ்
ஜியோ இன்போகாமில் இருந்து ரூ.167.97 கோடி மற்றும் ரூ.11.62 கோடி நிலுவைத் தொகையை
கொண்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நிலுவை பணத்தை மீட்க அரசாங்கம்
ஜியோவை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் தான்
பிஎஸ்என்எல் விஆர்எஸ் செயல்முறை முடிந்தது!
பிஎஸ்என்எல்
விஆர்எஸ் செயல்முறை ஆனது இந்தியாவின் மிகப்பெரிய வெகுஜன ஓய்வூதியமாக
கருதப்படுகிறது. ஜனவரி 31, 2020 அன்று 80,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். இது பிஎஸ்என்எல் நிதியை
சேமித்து வைக்கவும், வரும் ஆண்டுகளில் அவற்றை கவனமாக பயன்படுத்தவும் அனுமதிக்கும்.
தற்போதுள்ள 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில்
பிஎஸ்என்எல் ஏற்கனவே 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முழு அளவிலான 4ஜி வெளியீடு
ஆனது "4ஜி விளையாட்டில்" விஷயங்களை இன்னும் சுவாரசியமாக மாற்றும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக