Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

கொரானோ வைரஸ் பீதி காரணமாக சியோமி செய்யும் காரியத்தை பாருங்க!

சியோமி நிறுவனத்தின் Mi 10 மற்றும் Mi 10 Pro ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான அறிமுக தேதியை சியோமி அறிவித்துள்ளது. ஆனால் அந்த வெளியீட்டு நிகழ்வானது..??


2020 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மி 10 அடுத்த வாரம், பிப்ரவரி 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன ஊடக தளமான வெய்போ வழியாக சியோமி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. மி 10 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து மி 10 ப்ரோவும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

வெளியான வெய்போ போஸ்ட் ஆனது Mi 10 மற்றும் Mi 10 Pro க்கான டீஸர்களை காட்சிப்படுத்துகிறது. அதன் வழியாக LPDDR5 RAM போன்ற அம்சங்களின் இருப்பை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. உடன் 5ஜி, வைஃபை 6 கனெக்டிவிட்டி மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

 கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சியோமி மி 10 வெளியீடு ஆனது "ஆன்லைனில் மட்டுமே" ஒளிபரப்பப்பட உள்ளது . இதற்கான காரணத்தை உங்களுக்கு குறிப்பிட்டு கூற வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று நம்புகிறோம்.

இருப்பினும் அறியாதவர்களுக்கு, சீனாவில் கொரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதால் மி 10 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் ஆன்லைன் வழியாக மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ளது.

சியோமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் Mi 10 இல் ஆப்டிகல் ஸூம் செய்வதற்கான ஆதரவு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அழைப்பானது, வெளியாகப்போகும் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பல கேமரா அமைப்பு இருக்கும் என்றும் அதில் நான்கு தனித்துவமான சென்சார்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.
 
ஸ்டாண்டர்ட் மி 10 உடன், 16 ஜிபி வரை ரேம் கொண்ட மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகலாம். இந்த இரண்டு புதிய மி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே விற்பனைக்கு வருவதாக வதந்திகள் பரவுகின்றன.

எதிர்பார்க்கப்படும் மி 10 அம்சங்கள்!

மி 10 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 5 ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா சென்சார் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளது, இது சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் எச்எம்எக்ஸ் லென்ஸ் ஆக இருக்கலாம்.

மேலும் இது 48W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் ஊகிக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடல் 65W சார்ஜருடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு புதிய மி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு அறிமுகம் ஆன கேலக்ஸி எஸ் 10 தொடரில் இடம்பெற்றதைப் போல.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக