அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL நிறுவனம் அதன் ரூ.999 ப்ரீபெய்ட் பிளானின் வேலிடிட்டியை 270 நாட்கள் என்று நீடித்துள்ளது; இதன் முந்தைய செல்லுபடியாகும் காலம் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதோ முழு விவரம்!
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியபப்டும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது ப்ரீபெய்ட் திட்டமொன்றில் அட்டகாசமான திருத்தத்தை நிகழ்த்தி உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டர் அதன் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், ரூ.999 ப்ரீபெய்ட் திட்டமானது இப்போது 270 நாட்கள் என்கிற திருத்தப்பட்ட வேலிடிட்டியை வழங்குகிறது. முன்னதாக, இந்த பேக் 220 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது, அதாவது தற்போது இந்த திட்டம் 50 நாட்கள் என்கிற கூடுதல் செல்லுபடியை வழங்குகிறது.
இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அணுக கிடைக்கும். இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை என்கிற இடைப்பட்ட காலத்திற்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும்.
நன்மைகளை பொறுத்தவரை, பி.எஸ்.என்.எல் ரூ.999 ப்ரீபெய்ட் பேக் ஆனது இலவச உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் மும்பை, டெல்லி வட்டங்கள் உள்ளிட்ட தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இருப்பினும், 270 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளது.
இந்த திட்டம் பெரு வாய்ஸ்-ஒன்லி பிளான் ஆகும். அதாவது இது எந்தவிதாமா டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது. கூடுதல் நன்மையாக இந்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டமானது இரண்டு மாத பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
முன்னதாக, பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் மதுரம் ரூ.1,188 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியை குறைத்தது. முன்னதாக 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 65 நாட்கள் குறைக்கப்பட்டு 300 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது.
இந்த பேக் தற்போது சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் கிடைக்கிறது. நன்மைகளை பொறுத்தவரை, மதுரம் திட்டமானது 5 ஜிபி அளவிலான 2 ஜி / 3 ஜி / 4 ஜி டேட்டா, மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு (ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு மட்டும், அதன் பிறகு நிலையான விகிதங்களின் கீழ் அழைப்பு கட்டணம் வசூலிக்கப்படும்) மொத்தம் 1,200 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் கால 300 நாட்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக