Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதிய BS6 TVS Sport மற்றும் XL100 விலை அறிவிப்பு..!

டிவிஎஸ் நிறுவனம் பிஎஸ்-6 தரத்திலான எக்ஸ்.எல் 100 மொபட் மற்றும் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி பிஎஸ்-6 தரத்திலான ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள், எக்ஸ்.எல். 100 மொபட் ஆகியவற்றுக்கான விலையை அறிவித்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தனது அனைத்து இருசக்கர வாகன ரகங்களை பிஎஸ்-6 தரத்திற்கு மாற்றும் முயற்சியில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில், பிஎஸ்6 தரத்திலான என்டார்க் 125 ஸ்கூட்டர் மற்றும் ரேடியான் பைக்குகளை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது.

அதை தொடர்ந்து, தற்போது பிஎஸ்-6 தரத்திலான ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மற்றும் எக்ஸ்.எல் 100 மொபட் மாடல்களுக்கான விலையை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், இந்த வாகனங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

அதன்படி, புதிய பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கிற்கு ரூ. 51,170 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையாக நிர்னயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விடவும், புதிய பிஎஸ்-6 பைக் ரூ 5 ஆயிரம் கூடுதலாக விலை உயர்வு பெற்றுள்ளது.

பிஎஸ்-6 தரத்திலான எக்ஸ்.எல் 100 மொபட் வாகனத்தில் ஹெச்.டி.ஐ.டிஎஸ் வேரியன்டுக்கு ரூ. 43,044 (எக்ஸ்-ஷோரூம்,டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும், இந்த புதிய வெர்ஷனுக்கு ரூ. 3,500 விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எக்ஸ்.எல் 100 மொபட் வாகனத்தின் சிறப்பு பதிப்பு மாடலுக்கு ரூ. 43,804 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபட் வாகனத்திற்கு எலெக்ட்ரானிக் கார்ப் தேர்வுக்கு பதிலாக ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கான விலையை தவிர்த்து, வேறு எந்த புதிய தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், பிஎஸ்-6 எக்ஸ்.எல்100 மாடலுக்கு குறிப்பிட்ட மைனர் அப்டேட்டுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
 
இந்த மொபட் வாகனத்தின் முந்தைய வேரியன்டுகளைக் காட்டிலும், புதிய மாடலுக்கான ஆற்றல் மற்றும் டார்க் திறன் வெளிவருவதில் சில மாறுதல்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் தொடர்பாக டிவிஎஸ் நிறுவன அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக