
டிப் டாப் ஆக உடை அணிந்து, டக் இன் செய்து
கொண்டு ஆபீஸ் போனால் தான் அனைவரும் மதிப்பார்கள், அழகாகவும் தெரிவோம் என்ற
எண்ணத்திலேயே பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட நினைக்கின்றனர்.
அதற்காக பேண்ட் உடன் பெல்ட் மாட்டுவதெல்லாம் சரி தான். ஆனால், அந்த பெல்ட்டை ஏன்
மூச்சு விட முடியாத அளவிற்கு இறுக்கமாக அணிய வேண்டும்? ஒல்லியாக, தொப்பை தெரியாமல்
மறைப்பதற்காக, பழக்க தோசத்திற்காக என இறுக்கமாக பெல்ட் அணிவோரின் எண்ணிக்கை
ஏராளம். அடிவயிற்றில் அப்படி இறுக்கமாக அழுத்தம் கொடுப்பதால் என்னென்ன மாற்றங்கள்
உடலில் ஏற்படுகிறது தெரியுமா உங்களுக்கு?
மனிதனின் அடி வயிற்று பகுதியில்
தான் உடலை இணைக்க கூடிய பல முக்கிய நரம்புகள் செல்கின்றன. அந்த இடத்தில் இறுக்கமாக
அழுத்தம் கொடுக்கும் போது, பல்வேறு நரம்புகளின் செயல்பாடுகள் தடைப்பட்டு, பல ஆரோக்கிய
கேடுகள் உடலில் ஏற்படுகின்றன.
வயிற்று தொப்பை தெரியாமல் இருக்கவும்
ஏராளமான பெல்ட் வகைகள் சந்தைகளில் வலம் வருகின்றன. அவற்றை அணிவதாலும் இதே பிரச்சனை
தான் ஏற்படக்கூடும். வாருங்கள், இறுக்கமாக பெல்ட் அணிவதால் ஏற்படக்கூடிய உடல் நல
பாதிப்புகளை தெளிவாக அறிந்து கொள்வோம்...
நெஞ்செரிச்சல்
நாள் முழுவதும் இறுக்கமான பெல்ட்
அணிந்து கொண்டே இருந்தால், அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக நெஞ்செரிச்சல்
உண்டாகக்கூடும். இறுக்கமான பெல்ட், வயிற்றில் அழுத்தத்தை கொடுப்பதன் விளைவாக, உணவை
செரிக்க சுரக்கும் அமிலமானது, அதன் எல்லையை மீறி நுரையீரல் மற்றும் தொண்டைக்கு
வரக்கூடும். இறுக்கமாக பெல்ட் அணிவோரில் பெரும்பாலானோர், நெஞ்செரிச்சல், செரிமான
கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதற்கு இது தான் காரணம். இது
தொடரும் பட்சத்தில் தொண்டை புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது
குடலிறக்கம்
இறுக்கமாக பெல்ட் அணிவதால் தீவிர
பிரச்சனையான குடலிறக்கம் போன்றவை கூட ஏற்படுமாம். குடலிறக்கத்தால், வயிற்றின் மேல்
பகுதி பலவீனமடைந்து, அங்கு சுரக்கப்படும் அமிலத்தை தன்னுள் வைத்துக்கொள்ள
முடியாமல் போகிறது. அந்த அமிலங்கள் வயிற்றை சென்றடைவதால் எரிச்சல் உணர்வு
தீவிரமடைந்து, நெஞ்சு வலியை ஏற்படுத்திவிடும்.
மலட்டுத்தன்மை
இறுக்கமாக பெல்ட் அணியும் ஆண் மற்றும
பெண் இருபாலருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படுதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது
தெரியவந்துள்ளது. இடுப்பு பகுதியில் உள்ள இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய முக்கிய
உறுப்புகளில் இறுக்கமாக பெல்ட் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல்,
அந்தரங்க பகுதியின் காற்றோட்டமும் இறுக்கமாக பெல்ட் அணிவது தடுத்துவிடுகிறது.
அதனால், உடலின் வெப்பம் அதிகரித்து, விந்து எண்ணிக்கை குறைத்து விடுகிறது.
தண்டுவட
பிரச்சனைகள்
இடுப்பில் அணியும் இறுக்கமான
பெல்ட்கள், ஆண்கள் நிற்கும்போது வயிற்று தசைகளைப் பயன்படுத்தும் முறையை
மாற்றுகின்றன. இது அந்த தசைகள் மீது செலுத்தப்படும் கூடுதல் அழுத்தத்தின்
விளைவாகும். இந்த கூடுதல் அழுத்தம், முதுகெலும்பில் விறைப்பை ஏற்படுத்தும்.
அதுதவிர, அதிக இறுக்கமான பெல்ட்களை அணிவது ஈர்ப்பு மையம் மற்றும் இடுப்புப்
பகுதியின் கோணத்தையும் மாற்றுகிறது. மேலும், இது முழங்கால் மூட்டுகளிலும் கூடுதல்
அழுத்தத்தை தருகிறது.
முதுகு
வலி மற்றும் கால் வீக்கம்
இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கம்
உங்களுக்கு இருந்தால், முதுகு வலியும் இருக்கக் கூடும். இதற்கு காரணம், இடுப்பு
பகுதியில் உள்ள மிக முக்கிய நரம்புகளில் கொடுக்கப்படும் அழுத்தம் தான். அந்த
அழுத்தம் உங்கள் உடலை பாதிக்கக்கூடும். நரம்புகளின் பாதிப்பு காரணமாக கூட முதுகு
வலியும், இடுப்பை சுற்றிய அதிகப்படியான அழுத்தம் கால்களில் வீக்கத்தையும்
உருவாக்கக்கூடும்.
எனவே, உடல் நலனில் அக்கறை உள்ள ஒவ்வொரு
ஆணும், பெண்ணும் இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கத்தை தவிர்த்திடவும். தினந்தோறும்
இறுக்கமாக பெல்ட் அணிவதாலேயே இந்த பிரச்சனைகளை சந்திக்க கூடும். எப்போதுதாவது
அணிவதால் ஒன்றும் இல்லை. உடுத்தும் உடையிலும் கவனம் தேவை என்பதை தான் நினைவு
கூறுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக