Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

ரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி

ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர்
ப்போதெல்லாம் கடைத்தெருவை பார்த்து ஓ., இதுதான் கடைத்தெருவா என்று ஆச்சரியப்படும் அளவிலான காலம் மாறி விட்டது. எது எடுத்தாலும் ஆன்லைன் ஆர்டர் தான். அதிலும் அனைத்து பொருளிலுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஆன்லைன் ஆர்டர் செய்வதிலேயே பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஹேக்கர்கள் அட்டூழியம்
காலம் வளர்ந்த அளவு அதற்கேற்ப திருட்டு முறையும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது. முன்பெல்லாம் பாக்கெட்டில் பணம் வைத்திருப்போம் பிக்பாக்கெட் வந்து திருடுவார்கள். இப்போது அக்கவுண்டில் வைத்திருப்பதால் ஹேக்கர் என்ற பெயரில் கொள்ளையர்கள் வந்திருக்கின்றனர்.
ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர்
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்துள்ளனர். பின்னர் நெயில் பாலிஷிற்கான ரூ.388-ஐ ஆன்லைன் மூலம் அந்த வங்கிக் கணக்கு ஒன்றிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
தேதியில் நெயில் பாலிஷ் டெலிவரி ஆகவில்லை
நெயில் பாலிஷ் டெலிவரி ஆகும் தேதி என்று ஆர்டர் செய்யும் போதே குறிப்பிட்டிருக்கும் ஆனால் அந்த தேதியில் நெயில் பாலிஷ் டெலிவரி ஆகவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட இணையத்திற்கு சொந்தமான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
ஆர்டருக்கான பணம் இன்னும் வரவில்லை
அந்த பெண் தொடர்புகொண்ட சேவை மையத்தில் இருந்து பேசிய நபர், ஆர்டருக்கான பணம் இன்னும் வரவில்லை எனவும் அதன் காரணமாகவே நெயில் பாலிஷ் டெலிவரி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கணக்கோடு தொடர்புடைய செல்போன் நம்பர் கேட்ட சேவை மையம்
அதேபோல் பணம் வந்தால் மீண்டும் உங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துவிடுகிறோம் என கூறியுள்ளனர். அதோடு அந்த பெண்ணிடம் வங்கிக் கணக்கோடு தொடர்புடைய செல்போன் நம்பரை வாங்கியதாக கூறப்படுகிறது.
5 தவணையாக 90,946 ரூபாய் திருட்டு
அந்த பெண் செல்போன் நம்பர் கொடுத்த அடுத்த சில மணிநேரங்களில் இளம்பெண்ணின் வெவ்வேறு வங்கிக் கணக்கில் இருந்து 5 தவணையாக 90,946 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. மேலும் அவருடைய பொது வங்கிக்கணக்கு ஒன்றிலிருந்தும் ரூ.1500 எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மொத்தமாக ரூ.92,446 திருட்டு
இதுகுறித்து தெரிவித்த போலீசார், இளம்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.92,446 எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு தொடர்பான எந்த விவரங்களையும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை என கூறுகிறார்.
போலீஸார் விசாரணை
சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த இளம்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பலரிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக