அண்மையில் ஏர்டெல் நிறுவனம் தனது
போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது. இந்த
திட்டதின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது சலுகையிலேயே குடும்பத்தாரை எவ்வித
கூடுதல் கட்டணமும் இன்றி இணைப்பாக சேர்த்துக் கொள்ள முடியும்.
புதிய விலை உயர்வு
அதன்படி ஏர்டெல் ஆட் ஆன் திட்டத்தின்
ஆரம்ப விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, தற்சமயம் விலை உயர்வை அடுத்து
இதன் விலை ரூ.249-என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா முழுக்க ஏர்டெல்
வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. பின்பு ஏர்டெல் போஸ்ட்
பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக
கூறப்படுகிறது.
ரூ.249மட்டும் செலுத்தினால் போதும்
இருந்தபோதிலும் போஸ்ட்பெயிட்
இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தார் அல்லது
நண்பரை தங்களது குறைந்த விலை திட்டத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். அதாவது ரூ.499
மாத திட்டத்தை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே திட்டத்தில் இணைக்கும் போது
இரண்டாவது இணைப்பிற்குரூ.249மட்டும் செலுத்தினால் போதும்.
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் ஆட் ஆன்
திட்டத்தின் விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது இதற்கான
கட்டணம் ரூ.249 என மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர டேட்டாவுக்கு மட்டும்
ரூ.99-விலையில் ஆட் ஆன் சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக