ஸ்மார்ட்போன்களை ரிப்பேர் செய்து பார்த்து அதற்கு மதிப்பெண்களை வழங்கும் தளமான ஐஃபிக்ஸ்இட்டின் படி, இந்த மூன்று போன்கள் தான் இருப்பதிலேயே "மிகவும் மோசம்"!
பொதுவாகவே ஒரு ஸ்மார்ட்போனை ரிப்பேர் செய்ய வேண்டும் என்றால் நிறைய செலவாகும், "இவ்ளோ காசு செலவு செய்வதற்கு பதிலாக.. கூட கொஞ்சம் பணம் போட்டு புது ஸ்மார்ட்போனே வாங்கிடலாம்" என்று நாம் புலம்பித்தள்ளும் அளவிற்கு செலவாகும்.
இந்த இடத்தில் தான், ஐஃபிக்சிட் (iFixit) போன்ற வல்லுநர்களின் டிப்ஸ் தேவைப்படுகிறது. ஐஃபிக்சிட் என்பது பெரும்பாலான போன்களை "பொளந்து" பார்த்து, பின்னர் அவற்றை ரிப்பேர் செய்து பார்த்து, அந்த ரிப்பேர் ஆனது எவ்வளவு கடினமாக உள்ளது? என்பதை பொறுத்து அதற்கு மதிப்பெண்ணைக் கொடுக்கும் ஒரு தளமாகும்.
அப்படியாக சமீபத்தில் வெளியான ஐஃபிக்சிட் அறிக்கை ஒன்றானது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை ரிப்பேர் செய்ய மிகவும் கடினமான ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று கூறியுள்ளது - அது புதிய மோட்டோ ரேஸ்ர் ஆகும்!
வெளியான ஐஃபிக்சிட் அறிக்கையின்படி, புதிய மோட்டோ ரேஸரை ரிப்பேர் செய்தல் அடிப்படையின் கீழ் அதற்கு 10 க்கு 1 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் ஒரு ஸ்மார்ட்போன் பெற்ற மிகக் குறைந்த மதிப்பெண்களில் இதுவும் ஒன்றாகும்.இதற்கு முன்னதாகவே சாம்சங் கேலக்ஸி போல்ட் ஆனது 2 மதிப்பெண்களை பெற்றிருந்தது. இந்த பட்டியலில் ஆண்ட்ராய்டு போன்கள் மட்டும் தான் இருக்குமா என்று நீங்கள் கேட்டால் - இல்லை, ஐபோன் 11 ப்ரோவும் உள்ளது. அது 6 மதிப்பெண்களைப் பெற்றது.
மோட்டோ ரேஸரின் ரிப்பேரை மிகவும் கடினமாக்கியது எது?
ஐஃபிக்சிட்டின் படி, மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் நிறைய பசைகளைப் பயன்படுத்தியுள்ளது, மேலும் இரண்டு பேட்டரிகள் அகற்றப்பட வேண்டும். மேலும், மோட்டோ ரேஸரின் கட்டுமானமும் மிகவும் சிக்கலானதாக உள்ளது.
சுவாரசியமான விடயம் என்னவென்றால், மோட்டோ ரேஸரின் டிஸ்பிளே உடைந்தால், அதை மாற்றுவதற்கான செலவு 299 அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று மோட்டோரோலாவே கூறியுள்ளது. பெரும்பாலான பிரீமியம் போன்களின் டிஸ்பிளேவை மாற்ற இதைவிட அதிகம் செலவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ரேஸ்ர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமானது. அமெரிக்காவில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய வார்த்தைகள் இல்லை. இதன் விலை 1,599 அமெரிக்க டாலர்கள் ஆகும், அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.1,14,180 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக