Samsung Galaxy Note 10+ ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள் இதை படிக்க வேண்டாம், மீறி படித்தால் "அடச்சே அவசரப்பட்டு விட்டோமோ" என்று வருத்தப்பட வாய்ப்புள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெற்றியானது, அதை பின்பற்றுபவருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது போல் தெரிகிறது.
இதுதான் Kimtien Note 10 Plus (கிம்டீன் நோட் 10 பிளஸ்) ஆகும். சீனாவின் Aliexpress வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் அச்சு அசலாக சாம்சங் கேலக்ஸி நோட் 10+ போன்றே காப்பியடிக்கப்பட்ட வடிவமைப்பை பெற்றுள்ளது.
கூடுதல் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த கிம்டீன் நோட் 10 பிளஸ் ஆனது ஸ்டைலஸ் ஒன்றையும் கொண்டுள்ளது, இதன் விளைவாக டக்கென்று பார்க்கும் போது இது சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப போலவே தோற்றமளிக்கிறது.
கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் வண்ணம், வடிவமைப்பு, அம்சங்கள் என அத்துனையையும் காப்பியடித்த இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தை போன்றே ஸ்டைலஸ் ஒன்று இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமில்லை. ஆனால் உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் கிம்டீன் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை தான்!
நிச்சயமாக இது உண்மையான சாம்சங் ஸ்மார்ட்போனுடன் போட்டிபோடும் அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் இந்த கிம்டீன் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை வெறும் 166 அமெரிக்க டாலர்கள் ஆகும், இந்திய மதிப்பின்படி, ரூ.11860 ஆகும். அதாவது சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ஸ்மார்ட்போனிற்கு நீங்கள் செலுத்தியதில் ஐந்தில் ஒரு பங்கு!
அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் தயாரித்த 10-கோர் சிபியு மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டு இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஹெட் ஜாக், 4,800 எம்ஏஎச் பேட்டரி, ப்ளூடூத் 4.0 ஆதரவு மற்றும் 6.8 இன்ச் அளவிலான இன்செல் டிஸ்ப்ளே போன்ற கவனிக்கத்தக்க அம்சங்கள் உள்ளது.
கேமராத்துறையை பொறுத்தவரை, கிம்டீன் நோட் 10 பிளஸ் ஆனது அதன் முன் மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் + 23 மெகாபிக்சல் அளவிலான கேமராக்களை கொண்டுள்ளது.
ஷாப்பிங் வலைத்தளத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.1 கொண்டு இயங்குகிறது மற்றும் டூயல் சிம் ஆதரவைக் கொண்டுள்ளது.
வெளியான அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போனின் பல்லாயிரக்கணக்கான யூனிட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், கிம்டீன் நோட் 10 பிளஸை யார் உருவாக்குகிறார்களோ அவர்கள் அந்த இடத்தில் நன்றாக இயங்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக