சாம்சங் நிறுவனம் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி
A01 ஸ்மார்ட் போனை இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பட்ஜெட் விலை போனாக இருக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய
மலிவு விலை போன்
சாம்சங் நிறுவனம் தற்போது புதிய மலிவு
விலை போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி மாடல் போன் என்றாலே சாம்சங் ரசிகர்கள்
மட்டுமின்றி பல தரப்பையும் ஈர்த்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த
நிலையில் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பான மலிவு விலை ஸ்மார்ட் போன் ஏ01 போனை
பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
சாம்சங்
கேலக்ஸி ஏ 01 விலை
சாம்சங் கேலக்ஸி ஏ 01 வியட்நாம்-ல்
வெளியாக உள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து வெளியாகி உள்ளது.
வியட்நாமில் விடிஎன் 2,790,000 இதன்மூலம் இந்தியாவில் ரூ.8,539-க்கு அறிமுகமாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போன் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் நிறமானது நீலம், கருப்பு மற்றும்
சிவப்பு வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு
மற்றும் சிறப்பம்சங்கள்
சாம்சங் நிறுவனம் இந்தியா மற்றும் பிற
சந்தைகளில் அறிமுகமாகும் தேதி குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உலக
சந்தைகளில் இந்த மாதம் அறிமுகம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன்
உட்கட்டமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பலரையும் கவரும் விதமாகவே உள்ளது.
ரசிகர்களை
கவர வரும் சாம்சங் கேலக்ஸி A01
சாம்சங் கேலக்ஸி A01, போனானது 5.7
இன்ச் டிஸ்பிளே, ஹெச்டி டிஸ்பிளே வசதியை வழங்குகிறது.அதேபோல் பின்புறத்தில் 13
எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி கேமராவுடன் இரண்டு கேமரா வசதி உள்ளது.
அதேபோல் செல்பி கேமராவை பொருத்தமட்டில் 5 எம்பி கேமரா வசதியும் உள்ளது. குவால்காம்
ஸ்னாப்டிராகன் 439 செயலி மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 OS, யுஐ
2.0 உடன் இயக்கப்படுகிறது. அதேபோல் 3000 எம்ஏஹெச் பேட்டரி வசதியும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக