திரைப்படங்களில்
வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை
நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார்.
நேர்காணல்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன்
பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள
ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார்.
மர்ம
திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில்
எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன்
குறிப்பிட்டார்.
மேலும்,
செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த
தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக