பாகிஸ்தானில்
பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை அழிக்க வாத்துக் குஞ்சுகளை அனுப்பி
உதவச் சீனா முன்வந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல்கிப் பெருகியுள்ள
வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குச் சேதம் விளைவித்து வருகின்றன. அங்கிருந்து
பாகிஸ்தானிலும் பரவிச் சிந்து, பலூச்சிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களில் பல்லாயிரம்
எக்டேர் நிலப்பரப்பில் பயிர்களை அழித்துள்ளன.
இந்நிலையில் நட்பு நாடான சீனா, ஒரு லட்சம் வாத்துக்
குஞ்சுகளைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க உள்ளது.ஒரு வாத்துக்குஞ்சு ஒரு நாளில் 200 வெட்டுக்கிளிகளை உணவாக்கிக்கொள்ளும் என்பதால் வெட்டுக்கிளி தொல்லை குறையும்.
பூச்சிக்கொல்லிபயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அதிகச்செலவாகும். வாத்துக்குஞ்சுகளை விடுவதால் வெட்டுக்கிளி
தொல்லைகுறைவதுடன், வாத்து இறைச்சி மனிதர்களுக்குச் சத்தான உணவாகஅமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக