Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என மண்டபத்திலிருந்து ஓடிய மாப்பிள்ளை





ர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியைச் சேர்ந்த ரகுகுமார் - சங்கீதா ஆகியோர் கடந்த ஓராண்டாகக் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு நேற்று (பிப் 6ம் தேதி) திருமணம் நடக்கவிருந்தது.

இந்த திருமணத்திற்காகப் பெண் வீட்டார் சார்பில் பெண்ணிற்குச் சேலை எடுத்துள்ளனர். அதைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு அந்த சேலையின் தரம் பிடிக்கவில்லை அதனால் சேலையை மாற்றச் சொல்லியுள்ளனர் ஆனால் பெண் வீட்டார் சேலையை மாற்ற மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண மண்டபத்திலிருந்து ஓடிவிட்டனர். இதனால் நேற்று நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை. இது குறித்து பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை மீது புகார் அளித்துள்ளனர்.

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என மணமகன் மண்டபத்தைவிட்டு ஓடிய சம்பவம் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக