Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 24 பிப்ரவரி, 2020

யூடியூபில் திரௌபதி பட காட்சி : எப்ப வருது தெரியுமா?

திரௌபதி படத்தின் ஒரு காட்சி யூடியூபில் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் நடிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கும் படம் திரௌபதி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே பலரிடம் இருந்து எதிர்ப்பு வெளியானது. பின்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி, சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தில் நாடக காதலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ரிச்சர்ட் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது காதல் திருமணத்துக்கு எதிரான படம் என ஒரு தரப்பினர் இந்த திரைப்படத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குநர் மோகன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளதாவது,

இன்று மாலை 4 மணிக்கு #திரெளபதி படத்தின் ஒரு காட்சி
@moviebuffindia
YouTube சேனலில் வெளியாகும்.
இன்று மாலை 4 மணிக்கு #திரெளபதி படத்தின் ஒரு காட்சி @moviebuffindia YouTube சேனலில் வெளியாகும்.. #Draupathi… https://t.co/CPBktrpW3E
— Mohan G ���� (@mohandreamer) 1582515958000

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரௌபதி படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் முக்கிய ஸ்நீக் பீக் காட்சி யூடியூபில் வெளியாகிறது. ஆதரிப்போரும், எதிர்ப்போரும் சேர்ந்து இந்த படத்தின் காட்சியை பார்க்கவிருப்பதால், இப்போதே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக