பெருநகரங்களில்
உள்ளவர்களுக்கு நெரிசல் பற்றி நிச்சயம் அனுபவம் இருக்கும். பேருந்து,பெருநகர்,
ஆட்டோ, என எதிர் சென்றாலும் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் அதிகமாக
இருக்கும். அந்த காலங்களில் எப்படியாவது நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல
ஏதாவது வழியைத் தேடுவோம்.
இப்படியாக ஒருவர் தான் இடத்திற்கு விரைவாகச் செல்ல பல ரைடுகளை புக் செய்ய முயற்சி செய்தும், பல வழிகளை யோசித்தும் எந்த வழிகளும் கிடைக்காமல் கடைசியாக பஸ்சை திருடிச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
இது குறித்து தெலங்கானா டுடே பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி பேருந்து ஓட்டுநரான இலியாஸ் மற்றும் ஜெகதீஸ் ஆகியோர் பேருந்தை ஒரு பூங்கா அருகில் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். பேருந்து முழுவதும் பயணிகள் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் டீ குடித்து விட்டு வந்து பார்த்த போது அவர் நிறுத்திச் சென்ற இடத்தில் பேருந்து இல்லை. பயணிகளும் யாரும் இல்லை. உடனடியாக அவர்கள் பேருந்து டிப்போ மேனேஜருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் சொன்னார்கள். இதையடுத்து பஸ்சை தேடும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பேருந்து தொலைந்து போய் சுமார் 1 மணி நேரத்தில் டிப்போவிற்கு ஒரு போன் கால் வந்தது அதில் பேருந்தை அடையாளம் தெரியாத ஒருவர் எடுத்து அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அங்கு பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றுவிட்டார். பேருந்து இப்பொழுது பயணிகளுடன் ஒரு ஹைவேயில் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
பின்னர் போலீசார் வந்து பயணிகளிடம் நடத்திய விசாரணையில் இவர் பேருந்தில் ஏறியதும் இவர் ஓட்டுநர் கம் கண்டெக்டராக பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். அது மட்டுமல்ல அவர் மற்ற பயணிகளிடம் பயணித்ததிற்கான காசையும் வாங்கிவிட்டு அந்த காசுடன் தான் எஸ்கேப் ஆகியுள்ளார்.
இது குறித்து போலீசார் அந்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெரிசலிலிருந்து தப்பிக்க ஒருவர் பேருந்தைப் பயணிகளுடன் கடத்தி சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக