Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

பெங்களூரில் ஒரு பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்


 பெங்களூரில் ஒரு பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்
த்தாலியின் பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்று என்றும் சாய்ந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை பார்க்க உலகெங்கிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பெங்களூரில் திடீரென ஒரு கட்டிடம் சாய்ந்து பைசா நகரத்து கோபுரம் போலவே காட்சி அளிப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் நேற்று திடீரென 5 மாடி கட்டிடம் ஒன்று லேசாக சரிய தொடங்கியது.

இதனால் அந்த கட்டிடத்தில் உள்ளவர்களும் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கட்டிடத்தில் உள்ளவர்களை வெளியேற்றினார்கள்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக அந்த கட்டிடத்தில் உள்ளவர்களையும் எதிர் வீட்டில் உள்ள கட்டிடத்தில் உள்ளவர்களையும் வெளியேற்றினார்கள்.

5 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டி ஐந்து வருடங்கள் தான் ஆகிறது என்றும் அதற்குள் இப்படி ஒரு நிலைமையா? என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர்.

எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடத்தின் உரிமையாளர், கட்டிடத்தை கட்டிய காண்ட்ராக்டர் உள்பட பலரை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக