இலங்கையின் கம்பஹா பகுதியை சேர்ந்த ஒருவர் தன் மனைவியை பிரிந்து
தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டு வருவதை
வழக்கமாக கொண்டுள்ளார். அப்படியாக இவர் ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த
போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக
இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.
அதை பார்த்த அவர் அப்படி செய்ய நினைத்து அந்த மரத்தின் இலைகளை பறித்து ஜூஸ் போட்டு குடித்துள்ளார். அவர் ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பேஸ்புக் வீடியோவில் வந்த ஜூஸை பார்த்து ஒருவர் ஜூஸ் போட்டு குடித்து உயிரையே விட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக