Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

ஆதார் கார்டுக்கு ஆதாரம்தான் கேட்டோம்; குடியுரிமைக்கு அல்ல! – யுஐடிஏஐ விளக்கம்!

aadhar



127பேருக்கு குடியுரிமை சான்று அளிக்க கோரி யுஐடிஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து இதுகுறித்த விளக்கத்தை தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ளது.

ஆதார் கார்டு பெற போலியான ஆவணங்களை சமர்பித்ததாக 127 பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் ஆதார் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள யுஐடிஏஐ தாங்கள் யாரிடமும் குடியுரிமை ஆவணங்களை கேட்கவில்லை என கூறியுள்ளது. ஆதார் எண் பெற அளிக்க வேண்டிய சான்றுகளில் முறைகேடு செய்ததாக கருதப்படுபவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்களிடம் ஆதார் எண் பெற தேவையான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. அப்படி அவர்களிடம் தேவையான சான்றுகள் இல்லாத நிலையில் அவர்களது ஆதார் ரத்து செய்யப்படும். இது வழக்கமான நடைமுறைதான் என கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக