சாயல்குடி அருகே கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம்
நோக்கிச் சென்ற மகாராஷ்டிர மாநில பேருந்து விபத்தில் சிக்கி பெண் ஒருவர் சம்பவ
இடத்தில் பலியானார். இந்த விபத்தில் சிக்கி சுமார் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச்
சேர்ந்த 48 பேர் தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர். இந்த சுற்றுலாவிற்காக,
இவர்கள் தனியாகப் பேருந்து ஒன்றையும் வைத்திருந்தனர். பேருந்தில் கன்னியாகுமரிக்கு
நேற்று சென்று அங்குள்ள இந்து மத கோயில்களில் வழிபாடு நடத்தியுள்ளனர்.
கன்னியாகுமரியில் சாமி தரிசனம் செய்து விட்டு அதன் பின் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடுகு சந்தை சத்திரம் என்ற இடத்தில் சுமை கொண்டு செல்லும் வாகனம் மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து நடந்த பகுதியில் பயணித்த வாகன
ஓட்டிகள், இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதே வேளையில்
108 ஆம்புலன்சிற்கும் தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை
மீட்கும் பணி நடந்தது.
தகவலையறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சாயல்குடி தீயணைப்பு, மீட்புப் படையினர் காயமடைந்த உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 65 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீட்டதில் படுகாயமடைந்த 29 பேரை வாலிநோக்கம், சிக்கல், பாம்பூர் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொழி தெரியாத ஊரில் வழிதெரியாமல் விபத்தில் சிக்கிய இந்த வடமாநில மக்கள் கதறியது பார்ப்பவர்களை வேதனையடைய செய்துள்ளது. இரவு நேரத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாததால் தலா ஒரு ஆம்புலன்ஸில் 7 முதல் 8 பேரை கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக