Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

வின் டிவி மட்டும் தான் நல்ல டிவி: பாஜக பிரமுகர் நாராயண் திரிபாதி


வின் டிவி மட்டும் தான் நல்ல டிவி
மீபத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்து பேசியதை எந்த ஊடகமும் பெரிதாக கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயண் திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளதாவது:
'வின்' தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் 'தொலைக்காட்சி நிறுவனங்கள் விபச்சாரம் செய்கின்றன; காசுக்காக எதையும் விவாதம் செய்கிறார்கள்' என்று கேவலமாக பேசியது குறித்து கண்டனமோ, விவாதமோ செய்யாதது தி மு க மீது தமிழ் தொலைக்காட்சிகளுக்கு உள்ள பாசத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்துகிறது.
பாஜகவினர் தனிப்பட்ட முறையில் தங்களின் கருத்துக்களை தெரிவித்தாலும் கூட, அதை கட்சியின் கருத்தாக்கி இடது சாரிகள், திராவிட அடைமொழி கொண்ட இயக்கங்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அணிவகுப்போடு பாஜகவின் மீது தாக்குதல் தொடுக்கும் ஊடகவியலாளர்கள் மிக கொச்சையாக, தரம் தாழ்ந்து, கேவலமாக பணத்திற்காக எதையும் செய்யும் விபச்சாரிகள் என்று திமுக சொன்னது ஏன் என்ற கேள்வியை கேட்க கூட தயங்குவது மிக கொடுமை
தொடர்ந்து பாஜகவின் மீது தாக்குதல் தொடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக ஊடகங்களின் மீது உள்ள குற்றச்சாட்டை இந்த மௌனம் உறுதி செய்வது போலாகிவிடாதா? குறைந்தது ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து கருத்தை கேட்டிருக்க வேண்டாமா? 
திமுகவின் செய்தி தொடர்பாளர்களிடம் விவாதிருக்க வேண்டாமா? கருத்துரிமை குறித்து வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் 25 கோடிக்கு தங்கள் கட்சிகளை திமுகவிடம் அடகு வைத்து கொத்தடிமைகளாகி விட்ட நிலையில், முற்போக்குகளெல்லாம் பிற்போக்குகள் ஆகி விட்ட மர்மம் என்ன? 
திருமாவளவன், வைகோ, போன்றோர் ஓடி ஒளிந்து கொண்டது ஏன்? மறந்து விடாதீர்கள் மக்கள் முட்டாள்கள் என நினைத்து விடாதீர்கள். ஊடக தர்மத்தை, சுதந்திரத்தை காற்றில் பறக்க விட்டு கொண்டிருக்கின்ற ஊடகங்களை பார்த்து பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. உண்மையில் கடும் வேதனையில் பல மூத்த ஊடகவியலாளர்கள் வேதனையடைந்து உள்ளார்கள் இவ்வாறு நாராயண் திரிபாதி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக