Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

Ctrl + C மற்றும் Ctrl + V இன் தந்தையான லாரி டெஸ்லர் 74 வயதில் காலமானார்


Ctrl + C மற்றும் Ctrl + V இன் தந்தையான லாரி டெஸ்லர் 74 வயதில் காலமானார்
ந்த உலகில் கணினி அல்லது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வரும் எவரும் கண்ட்ரோல் சி (Ctrl+C)  மற்றும் கண்ட்ரோல் வி (Ctrl+V) ஆகிய திறவுச் சொல் ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. கணினியைப் பயன்படுத்தும் போது இந்த இரண்டு விசைகளும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு விசைகளையும் கண்டுபிடித்த மென்பொருள் பொறியாளர் லாரி டெஸ்லர் (Larry Tesler) தனது 74 வயதில் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், உலகின் பல மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை பிடித்துள்ளார்.
லாரி டெஸ்லர் 1960 இல் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கணினி பொறியாளராக பணியாற்றத் தொடங்கினார். தனது வேலையை எளிமைப்படுத்த, அவர் கணினியில் Ctrl + C மற்றும் Ctrl + V கட்டளைகளைக் கண்டுபிடித்தார்.
லாரி டெஸ்லர் ஜெராக்ஸ் (Xerox) நிறுவனத்தில் பணிபுரிந்த போது, தனது வேலையை செய்ய நிறைய நேரம் செலவிடப்பட வேண்டி இருந்தது. அதன்பிறகு தான் வேலையை எளிமையாக்க Ctrl + C மற்றும் Ctrl + V கட்டளைகளைக் கண்டுபிடித்தார். லாரியின் மரணம் குறித்து ஜெராக்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனம் அவரது கண்டுபிடிப்பை ட்வீட் செய்து பாராட்டியுள்ளது.
 The inventor of cut/copy & paste, find & replace, and more was former Xerox researcher Larry Tesler. Your workday is easier thanks to his revolutionary ideas. Larry passed away Monday, so please join us in celebrating him. Photo credit: Yahoo CC-By-2.0 https://t.co/MXijSIMgoA pic.twitter.com/kXfLFuOlon
— Xerox (@Xerox) February 19, 2020
லாரி டெஸ்லர் 1945 இல் நியூயார்க் நகரில் பிறந்தார். கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்ததும், கணினி பயன்பாட்டை எளிதாக்குவது, கணினி இடைமுக வடிவமைப்பில் லாரி நிபுணத்துவம் பெற்றார்.
தனது நீண்ட வாழ்க்கையில், லாரி டெய்லர் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினார். ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (Parc) கணிசமான காலத்தை செலவிட்ட பிறகு ஸ்டீவ் ஜாப்ஸின் அழைப்பின் பேரில் அவர் ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் சேர்ந்தார், அங்கு அவர் 17 ஆண்டுகள் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்தார். ஆப்பிளை விட்டு வெளியேறிய பிறகு, லாரி கல்வித்துறையில் சேர்ந்தார், அமேசான் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு சில நாட்கள் வேலை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக