காக்டெய்ல்
பட போஸ்டரால் சர்ச்சை எழுந்த நிலையில் தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
காக்டெய்ல்
காக்டெய்ல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்
யோகி பாபுவை முருகன் வேடத்தில் பார்த்தவர்கள் கோபம் அடைந்து அதை உடனே நீக்குமாறு
கூறினார்கள். தமிழ் கடவுளை கிண்டல் செய்வது போன்று போஸ்டர் உள்ளதாக விமர்சனம்
எழுந்தது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் பிஜி முத்தையா விளக்கம் அளித்து
அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, பிஜி மோகன்
ஒர்க்ஸ் என்கிற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து முருகன் இயக்கத்தில்
யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் காக்டெய்ல்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டோம். இப்படத்தில்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பறவை இனமான காக்டெய்ல் என்கிற கிளி பங்கேற்று இருப்பதால்
தான் காக்டெய்ல் என்ற தலைப்பை இயக்குநரின் பரிந்துரையின் பேரில் வைத்தோம் என்றார்.
யோகிபாபு
படத்தில் ஒரு காட்சியில் யோகிபாபுவின்
கனவில் தமிழ்க் கடவுள் முருகன் வருவதாக ஒரு காட்சி உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட
புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு
எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. எந்தவித உள்நோக்கமும் இல்லாத நிலையில்
வெளியிடப்பட்ட ஒரு போஸ்டர் இத்தகைய சர்ச்சைகளுக்கு உள்ளானது நாங்களே எதிர்பாராதது.
யாரையும் புண்படுத்துவதோ எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை எந்த விதத்திலும்
இழிவுபடுத்திவிடவோ ஒரு கனம் யோசித்ததில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல.
போஸ்டர்
எங்கள் படத்திலும் மதத்தைப் பற்றியோ
அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ மரியாதைக் குறைவாக காட்சிகளோ, வசனங்களோ இடம்
பெறவில்லை. ஆக இது வெறும் தற்செயலான ஒரு நிகழ்வு. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே
எங்களின் பட போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டக்கொடுத்து விட்டதால் இன்று அது
போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. ஒரு தயாரிப்பாளராக பொருளாதார நிலையைச் சார்ந்து
நிற்பதால் அதை நிறுத்த வழியில்லாது ஒட்டியிருக்கிறோம்.
நன்றிகள்
எந்தவித
சாயமும் பூசிக் கொள்ளாமல் கடவுளை வணங்கி ஆரம்பிக்கப்பட்ட ஒரு படத்திற்கு அவரவர்
எண்ணம் போல் சாயம் பூசிக் கொள்கிறீர்கள். அதன் மூலம் அரசியலாக்கப்படுவது
விரும்பத்தகாத ஒன்று. தற்செயலான இந்நிகழ்வு யாரையேனும் புண்படுத்தியிருந்தால்
எங்களின் வருத்தங்களை பதிவு செய்கிறோம். முருகப் பெருமானின் பக்தர்கள்
சுட்டிக்காட்டிய இப்படிப்பட்ட நிகழ்வு இனி நிகழாது. இப்படியொரு போஸ்டர் இனி எங்கள்
பட விளம்பரம் சம்பந்தமாக இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெருந்தன்மையோடு கடந்து போனவர்களுக்கும், தன்மையோடு சுட்டிக்காட்டியவர்களுக்கும்
எங்கள் நன்றிகள் என தெரிவித்துள்ளார் முத்தையா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக