சீனாவில்
மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை
அச்சுறுத்தி வரும் நிலையில், இணைய தளங்களில் கொரோனா வைரஸ் பற்றிய
வதந்திகள் தற்போது அதிகளவு பரவி வருகிறது.
இந்நிலையில், சமுக வலைதளமான ஃபேஸ்புக்
பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி செய்திகள் பரவுவதை தடுக்கும்
நடவடிக்கையை துவங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் குறித்த உலக
சுகாதார மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு முரணாக இருக்கும்
வதந்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தங்கள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என
ஃபேஸ்புக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தளத்தில் போலி செய்திகளை முடக்குவது ஃபேஸ்புக்கிற்கு
புதிய காரியமில்லை. முன்னதாக சமோவா சார்ந்த போலி செய்திகள் அதிகளவு பரவியதால்
ஃபேஸ்புக் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின் சமோவா சார்ந்த
போலி செய்திகளை ஃபேஸ்புக் தனது தளத்தில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக