அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால்
கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா
தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப்
படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, கொலை நடைபெற்றது உலகக்கு
தெரியவந்தது. இந்தநிலையில், பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தில் பேசிய சவுதி இளவரசர்
ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய கண்காணிப்பில்தான்
இந்தக் கொலை நடைபெற்றது என்று தெரிவித்தார்.
வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக்
வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக்
செய்யப்படுகின்றன என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. வாட்ஸ் ஆப்
மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பல பெரும் புள்ளிகள் உளவு பார்க்கப்படுகின்றனர்
என்று வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது உலகின் டாப்
பணக்காரருக்கும் நேர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல, ஜெஃப் பெஸோஸ் உலகின்
டாப் பணக்காரரும் அமேசான் நிறுவனர் என்பது அனைவரும் அறிந்ததே.
வாஷிங்டன போஸ்ட் பத்திரிக்கையின்
உரிமையாளர்
அமெரிக்காவின் பிரபல நாளிதழான
வாஷிங்டன் போஸ்டின் அதிபரும் இவர்தான். இது தான் அவரது போன் ஹேக் செய்யப்படக்
காரணம் என்று கூறப்படுகிறது. வாஷிங்டன் போஸ்ட் உலக அரசியல் தலைவர்களை அஞ்சாமல்
விமர்சனம் செய்யும் பிரபல நாளிதழ் ஆகும். இதையடுத்து வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிக்கையின் மீதும் அதன் உரிமையாளர் ஜெஃப் பொஸோஸ் மீது கடும் கோபம் இருக்கும்.
ஜெஃப் பொஸோஸ் செல்போன் ஹேக்
ஜெஃப் பொஸோஸ் மீது கோபமுள்ள முக்கிய
உலக தலைவர்களில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முக்கியமானவர். ஆம், முகமது
பின் சல்மானை விமர்சித்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் ஏராளமான கட்டுரைகள்
வெளிவந்திருக்கிறது.
சாமானிய மக்களின் நிலை
உலகின் டாப் பணக்காரருக்கே இந்த நிலை
என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என பலதரப்பினரும் கேள்வி எழுப்பி
வருகின்றனர். இதே நிலை மற்ற நாட்டு தொழிலதிபர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்
நிகழும் என டெலிகிராம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் பகிர வேண்டாம் என
அமெரிக்கா எச்சரிக்கை
அதேபோல் அமெரிக்காவில் அரசு சார்ந்த
மற்ற அதிகாரப்பூர்வ முக்கிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் பகிர வேண்டாம் என
எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய
வட்டாரங்கள், அவரது மொபைல் போனை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
End to end encryption
அதேபோல் இதுகுறித்த நடவடிக்கையில்
இறங்காமல் மாறாக பேஸ்புக் மூலமாகவே தகவல்கள் கசிந்து வருகிறது என பிற
சமூகவலைதளங்களின் மீது குற்றம்சாட்டி வருகிறது. வாட்ஸ் அப்-ல் காண்பிக்கப்படும்
End to end encryption நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது எனவும் டெலிகிராம்
குற்றம்சாட்டியுள்ளது.
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
எச்சரிக்கை
வாட்ஸ்அப்பில் குறியாக்க
செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
குற்றஞ்சாட்டினார். அதேபோல் டெலிகிராம் நிறுவனர் பயனர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும்
எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியுரிமை என்பதில் கவனிக்க வேண்டிய செயல்
என்னவென்றால் குறியாக்கத்தின் உறுதித் தன்மை குறித்து சிந்திக்க வேண்டும் என எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக