Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கால்களை இழந்த பூனைக்கு செயற்கைகால்கள் பொறுத்தி கண்கலங்க வைத்த ரஷ்ய மருத்துவர்.!

 உறைபனி  
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோவோகுஸ்நெட்ஸ்க் நகரில் கிளினிக் நடத்தி வரும் ரஷ்ய கால்நடை மருத்துவர் செர்ஜி கோர்ஷ்கோவ், ஒரு பெண்மணி சாலையில் செல்லும் போது தவறுதலாக குறுக்கே வந்த ஒரு பூனைக்கு சிகிச்சையளித்தார்.
மோசமான நிலையில் இருந்தது.
அந்த பூனை மோசமான நிலையில் இருந்தது. மிக நீண்ட காலமாக மோசமான சைபீரிய வானிலையில் சிக்கிக் கொண்டதன் விளைவாக, அதன் உடலின் பல பகுதிகளில் கடுமையான பனி புண்களால் அவதிப்பட்டது. டாக்டர்கள் அதன் வால், காதுகள் மற்றும் எல்லா பாதங்களையும் வெட்ட வேண்டியிருந்தது.
உறைபனி
இரண்டு சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளன: ஒன்று அது வீட்டை விட்டு ஓடிவந்திருக்க வேண்டும் அல்லது ஜன்னலுக்கு வெளியே விழுந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சைபீரியாவில் விலங்குகளுக்கு உறைபனி ஒரு உண்மையான பிரச்சினையாகும்" என்கிறார் கோர்ஷ்கோவ்.

நோவோசிபிர்ஸ்க்
குளிர்காலத்தில் நோவோசிபிர்ஸ்க் கிளினிக்கில் கால்நடை மருத்துவர்கள் குழு பொதுவாக பனியால் பாதிக்கப்பட்ட ஐந்து முதல் ஏழு பூனைகளுக்கு சிகிச்சையளிக்கும். மிகவும் மோசமான நிகழ்வுகளில், உறைபனி காயங்களுக்காக உடல் பாகங்களை நீக்கவேண்டி வருகிறது. ஆனால் ஒரு வருடம் கழித்து, ஒரு குறிப்பிட்ட பூனை இப்போது புதிதாக பொருத்தப்பட்ட டைட்டானியம் செயற்கை கால்கள் (புரோஸ்டெடிக்ஸ்) உதவியுடன் மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது.
டிம்கா (ரஷ்ய மொழியில் “மூடுபனி”)
டிம்கா (ரஷ்ய மொழியில் "மூடுபனி") என்று பெயரிடப்பட்ட அந்த சாம்பல் நிற பூனை, கோர்ஷ்கோவின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வந்தது அதன் அதிர்ஷ்டம். டிம்காவின் இழந்த பாதங்களுக்கு மாற்றாக சிறப்பு டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை கால்களை உருவாக்க கால்நடை மருத்துவர்கள், டாம்ஸ்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் (டி.பீ.யூ) பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றினர்.
கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி அல்லது சி.டி. ஸ்கேனை பயன்படுத்தி டிம்காவின் கால்கை ஸ்கேன் செய்து, பின்னர் அது 3D அச்சுப்பொறியைப் பயன்படுத்தி கால்கள் அச்சிடப்பட்டன. இதன்மூலம், அதன் தனிப்பயனாக்கப்பட்ட டைட்டானியம் கால்கள் உருவாக்கப்பட்டன.
தொற்றுநோயைத் தடுப்பதற்கும், பூனையின் உடல் அதன் கரிமமற்ற புதிய கால்களை நிராகரிப்பதைத் தவிர்ப்பதற்கும், அவர்கள் டைட்டானியம் செயற்கைகால் முனைகளில் கால்சியம் பாஸ்பேட்டைப் பயன்படுத்தினர். இது மைக்ரோ-ஆர்க் ஆக்ஸிஜனேற்றம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் அதன் கால் எலும்புகளில் எளிதில் இணைக்க அனுமதித்தது.
குதிக்கவும் அனுமதிக்கிறது
அதன் செயற்கைகால்களின் "பாத" பாகங்கள் உண்மையான பாதங்களின் வடிவத்தை ஒத்திருந்தன. மேலும் அவை நெகிழ்வான பொருளால் பூனையின் உண்மையான பாதத்தை ஒத்த வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், அது வசதியாக நடக்கவும் குதிக்கவும் அனுமதிக்கிறது.
அறுவை சிகிச்சை
டிம்காவின் சிகிச்சை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இப்பூனை தனது முன் கால்களுக்கு டைட்டானியம் செயற்கை பாதங்களின் முதல் தொகுப்பைப் பெற்றது, பின்னர் அதன் பின்னங்கால்களைப் பெற்றது. ஜூலை 2019 இல் நடந்த ஒரு அறுவை சிகிச்சையில் டிம்காவிற்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பாதங்கள் பொருத்தப்பட்டன. டிசம்பர் மாதத்திற்குள், டிம்கா தனது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு, முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிது.
நம்பமுடியாத முன்னேற்றம்
சிறந்த கால்நடை மருத்துவமனையான இந்த கிளினிக் வெளியிட்ட வீடியோவில் டிம்காவின் நம்பமுடியாத முன்னேற்றம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் டிம்கா தனது புதிய செயற்கை கால்களுக்கு எவ்வளவு நன்றாக பழகிக்கொண்டது என்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது. கிளினிக்கைச் சுற்றிலும் சுறுசுறுப்பாகப் பின்தொடர்வதையும், ஒரு பொம்மை கம்பளத்தின் மீது துள்ளிக் குதிப்பதையும், மற்ற பூனைகளைப் போலவே சிறப்பாக அனுபவிப்பதையும் அதில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக